தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதுச்சேரி 2026: மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசின் அதிகார ஆக்கிரமிப்பு மக்கள் மன்றத்தில் ஒரு வாழ்வா-சாவா போராட்டம்!

8 Apr 2026, 5:30 am
புதுச்சேரி 2026: மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசின் அதிகார ஆக்கிரமிப்பு மக்கள் மன்றத்தில் ஒரு வாழ்வா-சாவா போராட்டம்!

புதுச்சேரி 2026: மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசின் அதிகார ஆக்கிரமிப்பு மக்கள் மன்றத்தில் ஒரு வாழ்வா-சாவா போராட்டம்!

இந்தியாவின் மிகச்சிறிய நிலப்பரப்பான புதுச்சேரி யூனியன் பிரதேசம், வரும் ஏப்ரல் 9 அன்று தனது 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலை எதிர்கொள்கிறது. இத்தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான களம் அல்ல; மாறாக, புதுச்சேரியின் தன்னுரிமையும் ஜனநாயக மாண்புகளும் ஒன்றிய பாஜக அரசின் அதிகார ஆக்கிரமிப்பால் சிதைக்கப்படுவதைத் தடுப்பதற்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறப்போராக உருவெடுத்துள்ளது.

கடந்த ஐந்தாண்டு கால என்ஆர் (என்ஆர் காங்கிரஸ் - பாஜக) ஆட்சியில் புதுச்சேரியின் நிர்வாகம் முற்றிலுமாக ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு பொம்மை அரசாங்கமாக மாற்றப்பட்டதும் வாக்காளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் கடந்த பத்தாண்டுகளில் பாஜக முன்னெடுத்த அரசியல் என்பது தேர்தல்களில் வெற்றி பெறுவதல்ல, மாறாக குறுக்கு வழியில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே ஆகும். 2016இல் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத பாஜக, 1963ஆம் ஆண்டு யூனியன் பிரதேசங்கள் சட்டத்தைப் பயன்படுத்தி மூன்று நியமன எம்எல்ஏ-க்களைத் தன்னிச்சையாக நியமித்தது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவையில் 10 சதவீத பலத்தை கொல்லைப்புற வழியாக பாஜகவிற்கு வழங்கியது.

15 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. 2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் மாநில அந்தஸ்து பற்றிப் பேசிய பாஜக, ஆட்சி வந்த பிறகு மௌனம் காப்பது அதன் இரட்டை வேடத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது. புதுச்சேரியின் நிதி ஆதாரம் என்பது பெருமளவில் ஒன்றிய அரசின் கருணையையே சார்ந்துள்ளது.

இந்தத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நிலையை உறுதிப் படுத்தி, இடதுசாரிகள், சிபிஐ(எம்) மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகள் இம்முறை தனித்துவமான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இது ஒரு தற்காலிகத் தேர்தல் முடிவுக்கான நகர்வு மட்டுமல்ல, மாறாக புதுச்சேரியின் உழைக்கும் வர்க்கத்தின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதற்கான ஒரு கொள்கை முடிவு.

புதுச்சேரியின் 9.44 லட்சம் வாக்காளர்களில் பெரும்பான்மையாக உள்ள பெண் வாக்காளர்கள், இந்தத் தேர்தலின் போக்கைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.2,000-ஐத் தொட்டுள்ள நிலையில், பாஜகவின் வெற்றி வாக்குறுதிகள் பெண்களிடம் எடுபடவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக ரேஷன் கடைகள் திட்டமிட்டு மூடப்பட்டது மற்றும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதது போன்ற அரசின் தோல்விகள் இத்தேர்தலில் அவர்களுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக அமையும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.