தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதுச்சேரி 16ஆவது சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி ஏற்பு! மலையாளத்தில் உறுதிமொழி எடுத்த திமுக எம்எல்ஏ

20 May 2026, 10:22 pm
புதுச்சேரி 16ஆவது சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி ஏற்பு! மலையாளத்தில் உறுதிமொழி எடுத்த திமுக எம்எல்ஏ

புதுச்சேரி 16ஆவது சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி ஏற்பு! மலையாளத்தில் உறுதிமொழி எடுத்த திமுக எம்எல்ஏ

புதுச்சேரி, மே 20 - புதுச்சேரி 16-ஆவது சட்டப்பேரவையின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 29 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தற்காலிக பேரவைத் தலைவர் அ. அன்பழகன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதில் மங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான முதல்வர் ஆர். ரங்கசாமி முதலாவதாக உறுதிமொழி வாசித்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ் மற்றும் காரைக்கால், மாஹே பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரிசையாகப் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

ஒன்றிய அரசு புதுச்சேரியில் இந்தியைத் திணிப்பதாகக் கூறியும், பிரெஞ்சு மொழி நீக்கப்படுவதை எதிர்த்தும் பாகூர் தொகுதி திமுக உறுப்பினர் ஆர். செந்தில்குமார் பிரெஞ்சு மொழியில் உறுதிமொழி ஏற்க அனுமதி கேட்டு பேரவை செயலாளரிடம் கடிதம் வழங்கியிருந்தார்.

அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், அவர் பிராந்திய மொழியான மலையாள மொழியில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் பேரவைக் கூட்டத்தைக் காலவரையின்றி தற்காலிக பேரவை தலைவர் அ. அன்பழகன் ஒத்திவைத்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.