புதுச்சேரி ‘மாடல்’... தில்லிக்கு ‘நோடல்’! ரங்கசாமியின் வினோத அரசியல் வித்தைகள்!
1 Apr 2026, 4:02 pm
<p><strong>புதுச்சேரி ‘மாடல்’... தில்லிக்கு ‘நோடல்’! ரங்கசாமியின் வினோத அரசியல் வித்தைகள்!</strong></p>
<p>“புதுச்சேரியில எல்லாம் ஒரு மாடல்” என்று ஆரம்பித்து, “தில்லி சொல்றத கேட்டாத்தான் எல்லாம் நடக்கும்” என்று முடித்திருக்கிறார் புதுச் சேரி முதல்வர் என். ரங்கசாமி. பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, அவர் ஆங்கில நாளி தழுக்கு அளித்துள்ள நேர்கா ணல் புதுச்சேரி அரசியலில் ஒரு புதுவிதமான ‘சரண்டர்’ அரசி யலை வெளிச்சம் போட்டுக்காட்டு கிறது. அதிகாரம் இல்லாத முதல்வர்? நேர்காணல் முழுவதும் ரங்க சாமியின் பிரதான புலம்பல் ‘அதிகாரம்’ பற்றியே இருக்கிறது. ஒரு முழுமையான மாநில அந்தஸ்து இல்லாததால், சின்னச் சின்ன கோப்புகளுக்கும் துணை நிலை ஆளுநர் அலுவலகத்திற்கு போய் காத்துக்கிடக்க வேண்டி யிருப்பதாகக் குமுறுகிறார். ஆனால், வேடிக்கை என்ன வென்றால், எந்த பாஜக ஒன்றிய அரசு மாநில அந்தஸ்து தர முடியாது என்று பிடிவாதமாக இருக்கிறதோ, அதே பாஜகவுடன் தான் அவர் கூட்டணியில் இருக்கிறார். “மத்தியில் ஆளும் கட்சியுடன் இணக்கமாக இருந் தால் தான் வளர்ச்சி நடக்கும்” என்பது இவருடைய தாரக மந்தி ரம். இது ‘கூட்டாட்சி’ தத்துவமா அல்லது ‘கூஜா’ தூக்கும் தத்து வமா என்று புதுச்சேரி மக்கள் வாய்விட்டுச் சிரிக்கிறார்கள். தமிழ்நாட்டை விட பெட்டராம்! பக்கத்து மாநிலமான தமிழ் நாட்டின் திமுக அரசு பெண் களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்குவதைப் பெருமையாகப் பேசுகிறது. ஆனால் ரங்கசாமியோ, “நாங்க ஏற்கெனவே 2,500 ரூபாய் கொடுக்கிறோம்” என்று கணக்குக் காட்டுகிறார். ஆனால், அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வச திகளில் புதுச்சேரி பின்தங்கியிரு ப்பதைச் சுட்டிக்காட்டினால், “எல்லாவற்றுக்கும் தில்லியின் அனுமதி தேவை” என்று ஒரே போடாகப் போட்டு தப்பித்துக் கொள்கிறார். இது எப்படியிருக் கிறது என்றால், “வீட்டுக்கு நான்தான் எஜமான், ஆனால் சாவி பக்கத்து வீட்டுக்காரரிடம் இருக்கிறது” என்று சொல்வது போல் இருக்கிறது. கொள்கையா? வசதியா? தேர்தலில் வெற்றிபெற ‘ஐடி யாலஜி’ (கொள்கை) முக்கிய மில்லை, தில்லியுடன் இருக்கும் ‘அலைன்மென்ட்’ (இணக்கம்) தான் முக்கியம் என்று ரங்கசாமி வெளிப்படையாகப் பேசுகிறார். அதாவது, கொள்கை என்பது வெறும் அலங்காரப் பொருள், தில்லி போடும் கட்டளைதான் நிஜம் என்பது அவர் வாதம். தேர்தல் நேரத்தில் பணப்புழக்கம் அதிகமாக இருப்பதாக எழுப்பப் பட்ட கேள்விக்கு, “ஏன் புதுச்சேரி யை மட்டும் கேட்கிறீர்கள், இது எல்லா இடங்களிலும் தான் நடக்கிறது” என்று ‘பஞ்சாயத்து’ பாணியில் பதிலளித்து நழுவி யுள்ளார். சுயாட்சி முழக்கமும்... தில்லி அடிமையும்! “முழு அதிகாரம் கொண்ட அரசு வேண்டும்” என்று கேட்டுக் கொண்டே, அதிகாரத்தை மொத்த மாக தில்லியிடம் ஒப்படைத்துள்ள பாஜக கூட்டணியில் ரங்கசாமி இருப்பதுதான் ‘புதுச்சேரி மாடல்’ அரசியலின் உச்சக்கட்ட நகைச் சுவை. ரங்கசாமியின் இந்த ‘இணக்க அரசியல்’ புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தைப் பெற்றுத் தருமா அல்லது இருக்கும் கொஞ்ச நஞ்ச அதிகாரத்தையும் தில்லிக்குத் தாரை வார்க்குமா என்பதை மக்கள் விரைவில் ‘சிம்பல்’ மூலமாகச் சொல்வார்கள்!</p>
