தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஓய்வூதியத் திட்ட விதிகள், வழிகாட்டு நெறிமுறைகளை விரைந்து வெளியிடுக! ஜாக்டோ-ஜியோ வலியுறுத்தல்

28 Feb 2026, 2:29 pm
ஓய்வூதியத் திட்ட விதிகள், வழிகாட்டு நெறிமுறைகளை விரைந்து வெளியிடுக! ஜாக்டோ-ஜியோ வலியுறுத்தல்
<p><strong>ஓய்வூதியத் திட்ட விதிகள், வழிகாட்டு நெறிமுறைகளை விரைந்து வெளியிடுக! ஜாக்டோ-ஜியோ வலியுறுத்தல்</strong></p> <p>சென்னை, பிப். 28 &ndash; தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதி யத் திட்டத்திற்கான விதிகள், வழிகாட்டு நெறி முறைகளை விரைந்து வெளியிட வேண்டு மென்று ஜாக்டோ&ndash;ஜியோ வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு கடந்த ஜன.3 ஆம் தேதி தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தது. அதற்கான அரசா ணையை ஜன.9 ஆம் தேதி வெளியிட்டது. ஆனால், அதற்கான விதிகள், வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடாமல் உள்ளது. இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ வெளி யிட்டுள்ள அறிக்கையில், &ldquo;விதிகள், வழிகாட்டு நெறிமுறைகளை விரைந்து வெளியிட வேண்டும். அதில், 10 சதவீத ஊதியம் பிடித்தம் செய்வதை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். ஏற்கெனவே பிடித்தம் செய்த தொகையை பழைய ஓய்வூதியத் திட்டத்தினைப் போல் பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்காக மாற்ற வேண்டும். மேலும், இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மிகக் குறுகிய காலத்தில் இறக்க நேரிட்டால், சேமிப்புத் தொகையை வட்டியுடன் வாரிசுதாரருக்கு வழங்க வேண்டும். ஓய்வூதியப் பலன்களை கரு வூலக் கணக்குத் துறையின் சார்பாக ஐஎப்எச் ஆர்எம்எஸ் மூலமாகவே வழங்க வேண்டும். 31.12.2025-க்கு முன்பு பணி ஓய்வுபெற்ற சுமார் 3 ஆயிரம் பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இறுதித் தொகையைப் பெறாமல் உள்ள வற்றை உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். 2025 டிச.31-க்கு முன் ஓய்வு பெற்றவர்கள், தாங்கள் பெற்ற இறுதி தொகையை அரசுக்கு திருப்பிச் செலுத்த முன்வந்துள்ளவர்களை உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும்; ஏற்கெனவே பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஏற்கத்தக்க ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்&rdquo; என்றும் வலியுறுத்தி உள்ளனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.