தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘நீலமலைத் தொல்லியல்’ நூல் வெளியீடு

30 Nov 2025, 4:29 pm
‘நீலமலைத் தொல்லியல்’ நூல் வெளியீடு
<p><strong>&lsquo;நீலமலைத் தொல்லியல்&rsquo; நூல் வெளியீடு</strong></p> <p>உதகை, நவ.30- தமிழ்நாட்டின் தொல்லியல் வரலாறை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் உரு வாக்கப்பட்ட &lsquo;நீலமலைத் தொல்லியல்&rsquo; என்ற &nbsp;நூலை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்ன ரசு வெளியிட்டார். நீலமலையின் பாறை ஓவியங்கள், பெருங்கல்லறைகள், நடுகற்கள், கல்வெட்டு கள், பழங்குடியினர் வரலாறு, அவர்களின் &nbsp;சடங்கு முறைகள் ஆகிய பல்வேறு பரி மாணங்களைக் கொண்ட தொல்லியல் தரவு களை உள்ளடக்கி, தமிழ்நாட்டின் தொல்லி யல் வரலாறை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் யாக்கை அறக்கட்டளை சார்பில் &nbsp;&lsquo;நீலமலைத் தொல்லியல்&rsquo; என்ற நூல் உரு வாக்கப்பட்டது. இந்நிலையில், உதகையி லுள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத் தில் சனியன்று நடைபெற்ற நூல் வெளி யீட்டு விழாவிற்கு தஞ்சை பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை முன்னாள் தலைவர் எ.சுப்பராயலு தலைமை வகித்தார். யாக்கை அறக்கட்டளையின் குமரவேல் ராமசாமி வரவேற்றார். நூலை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு பெற்றுக்கொண்டார். இதன்பின் அமைச்சர் பேசுகையில், நீலகிரி மலை என்பது தொல்லியல் துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் பழங்குடிகள், தாங் கள் வாழ்ந்த காலத்தில் தங்களுடைய கைவண்ணத்தைக் காட்டியுள்ளனர். பாறை &nbsp;ஓவியங்களில் இருந்து பின்னர் கல் எழுத்து &nbsp;உருவானது. கோத்தகிரி அருகே கரிக்கையூரில் உள்ளதுபோல, பல்வேறு இடங்களில் பாறை &nbsp;ஓவியங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பாறை ஓவியங்களை ஆவணப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரவுகள் &nbsp;தொகுத்து வெளியிடப்படும். முதற்கட்டமாக &nbsp;கரிக்கையூா் பாறை ஓவியங்கள் குறித்த ஆவ ணத் தொகுப்பை விரைவில் வெளியிட உள் ளோம். 4 ஆண்டு கால திட்டம் முடியும் &nbsp;தருவாயில் உள்ளது, என்றார். இந்நிகழ்ச்சி யில் உதகை நகர்மன்றத் தலைவர் எம்.வாணீஸ்வரி, தமிழ்நாடு தொல்லியல் துறை &nbsp;முன்னாள் இணை இயக்குநர் பூங்குன்றன், வைகை தொல்லியல் பண்பாட்டுக் கழக நிறு வனர் பாவெல் பாரதி உட்பட பலர் கலந்து &nbsp;கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.