கால்வாய்களை சீரமைக்காத பொதுப்பணித்துறை
5 Feb 2026, 3:40 pm
<p><strong>கால்வாய்களை சீரமைக்காத பொதுப்பணித்துறை</strong></p>
<p>உடுமலை, பிப்.5- பிஏபி பாசனக் கால்வாய்களை சீர மைக்காத பொதுப்பணித்துறையை கண் டித்து, குடிமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடுமலை திருமூர்த்தி அணையிலி ருந்து முதலாம் மண்டல விவசாய பயன் பாட்டிற்கு ஜன.24 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனிடையே, தமிழக முதல்வர் உடுமலையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, பிஏபி கால்வாய்களை தூர்வார ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்ப டும் என்ற அறிவிப்பின்படி, கால்வாய் கள் தூர்வாரும் பணி துவங்கியது. இந் நிலையில், குடிமங்கலம் பகுதியில் கால்வாய்கள் முறையாக தூர்வார வில்லை என குற்றஞ்சாட்டி, அப்பகுதி விவசாயிகள் வியாழனன்று பூளவாடி – மெட்ராத்தி பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப் பகுதி விவசாயிகள் கூறுகையில், உடு மலை தாலூகா, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் தாலுகா பகுதிகளில் பிஏபி வாய்க்கால் முழுமையாக சீர மைப்பு செய்யாமல் உள்ளது. உடனடி யாக சரி செய்ய வேண்டும் என பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. திருமூர்த்தி அணையில் திறக் கபட்ட தண்ணீரை, இன்னும் இரண்டு தினங்களில் எங்களின் விவசாய நிலத் திற்கு எடுக்க வேண்டிய சூழ்நிலை யில் உள்ளோம். எனவே, பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.</p>
