முந்தய பக்கம்

தார்ச்சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

4 Mar 2026, 5:01 pm
தார்ச்சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
<p><strong>தார்ச்சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்</strong></p> <p>தருமபுரி, மார்ச் 4- நாகர்கூடல் பகுதியில் சிதலமடைந்த தார்ச்சாலையை உட னடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியு றுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட நாகர்கூடல் ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் &nbsp;மற்றும் பள்ளி குழந்தைகள், நாகர்கூடல் பகுதியில் இருந்து இண்டூர் செல்லும் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இச் சாலை வழியாக தினமும் கனரக வாகனங்கள், ஜல்லி கற்கள் &nbsp;மற்றும் மண் ஏற்றிச்செல்லும் டிப்பர் லாரிகள் அதிகளவில் சென்று வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் பயன்ப டுத்தி வந்த சாலை தற்பொழுது சிதலமடைந்து குண்டும், &nbsp;குழியுமாக காணப்படுகிறது. வளைவான பகுதி அருகே &nbsp;சாலை சிதலமடைந்ததால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத் துக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ள னர். எனவே, பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் &nbsp;தார்ச்சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப் பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி யுள்ளனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram