முந்தய பக்கம்

ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்ட

8 Feb 2026, 3:55 pm
ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்ட
<p><strong>ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் வலியுறுத்தல் </strong></p> <p>உதகை, பிப்.8- கூடலூர் அருகே பாடந்துறை பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறை யினர் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் அதனை சுற்றி யுள்ள கிராமப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால், மக்கள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக ளுக்குள் நுழையும் யானைகள் வாழை, தென்னை, போன்ற வற்றை சேதப்படுத்தி வருகின்றன. மேலும், வீடுகளின் முன்பு &nbsp;முகாமிடுவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரு வதற்கே அச்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில், பாடந் துறை குடியிருப்பு பகுதிகளை ஒட்டிய தேயிலைத் தோட் டத்தில் ஒற்றை யானை முகாமிட்டதால் மக்கள் மிகுந்த அச்ச மடைந்தனர். மேலும், அருகருகே இருந்த குடியிருப்பு வாசி களுக்கு தொலைபேசி மூலம் யானை இருப்பதாக எச்ச ரிக்கை செய்யப்பட்டது. தேயிலைத் தோட்டத்தில் யானை &nbsp;சுற்றி திரிவதால் அதிகாலை நேரங்களில் தேயிலை பறிக்கச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லக்கூடிய மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, உடன டியாக வனத்துறையினர் யானை ஊருக்குள் நுழையாத வாறு, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram