முந்தய பக்கம்

மின்மாற்றியை இடமாற்றம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்

9 Feb 2026, 3:02 pm
மின்மாற்றியை இடமாற்றம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்
<p><strong>மின்மாற்றியை இடமாற்றம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்</strong></p> <p>தருமபுரி, பிப்.9- சேலம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலையில், உயிர் பலிக்காக காத்திருக்கும் உயர் அழுத்த மின்மாற்றியை, வேறு இடத்தில் மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லும் என்எச்- 47 தேசிய நெடுஞ்சாலை தருமபுரி வழியாக செல்கிறது. இந்த &nbsp;தேசிய நெடுஞ்சாலையிலிருந்து தருமபுரி நகரப் பகுதிக்கு செல்வதற்கு, குண்டல்பட்டி அருகே பிரிவு சாலை செல்கிறது. இச்சாலையில் அதிக விபத்துக்ள் ஏற்பட்டு உயிர் &nbsp;சேதம் ஏற்பட்டு வருவதால், அந்த இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த னர். அந்த கோரிக்கையை ஏற்று, ஒன்றிய அரசு உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ள நிலை யில், தற்போது அங்கு அணுகு சாலை அமைக்கும் பணி &nbsp;நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த அணுகு சாலை பகுதியிலுள்ள பச்சமுத்து மகளிர் தனியார் கல்லூரிக் கும், வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரிக்கும் இடை யில் உயர் மின் அழுத்த மாற்றி உள்ளது. மேம்பாலம் கட்டும் பணியின்போது ஆயிரக்கணக்கான கனரக வாக னங்கள் இந்த அணுகு சாலை வழியாக செல்லும் பொழுது, சாலையை ஒட்டியுள்ள இந்த மின்மாற்றில் உரசி &nbsp;தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. எனவே, மேம்பாலப் பணிகள் தொடங்குவதற்கு முன்னரே, உயிர் பலிக்காக காத்திருக்கும் இந்த உயர்மின் அழுத்த மாற்றியை, வேறு இடத்திற்கு மாற்றி &nbsp;அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram