மின்மோட்டார் பழுதால் குடிநீர் இன்றி தவித்த பொதுமக்கள்
24 Feb 2026, 3:55 pm
<p><strong>மின்மோட்டார் பழுதால் குடிநீர் இன்றி தவித்த பொதுமக்கள்</strong></p>
<p>நாமக்கல், பிப்.24- சின்னார் பாளையம் பகுதியில் மின்மோட்டார் பழுதால், வாகனம் மூலம் குடிநீர் வழங்கப்பட்ட நிலையில், பொது மக்கள் போராட்டம் நடத்த முயன்றதால், மீண் டும் குடிநீர் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 15 பஞ் சாயத்துகள் உள்ளது. இதில் எலந்தகுட்டை ஊராட்சிக்குட்பட்ட சின்னார் பாளையம் என்ற பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள் ளது. இந்நிலையில் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீர் மின்மோட்டார் கடந்த வாரத்தில் பழுதாகி உள்ளது. இதனால் முறை யாக குடிநீர் வராததால் எலந்த குட்டை பஞ் சாயத்தை அணுகிய பொதுமக்கள் குடிநீர் வழங்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி னர். இதனையடுத்து காலை, மாலை நேரங்க ளில் டிராக்டர் மூலமாக பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் வாகனம் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆவேசமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனையடுத்து உடனடியாக டிராக்டர் மூலமாக மீண்டும் குடிநீர் வழங் கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் கூறும் பொழுது, பஞ்சாயத்து நிர்வா கம் முறையாக குடிநீர் வழங்காததால், அனை வரும் குடிநீருக்கு தொலைதூரங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. மேலும் மிகக் குறைவான அளவில் குடிநீர் வழங்குவதால் போதுமான குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட் டுள்ளதாகவும், குற்றம் சாட்டினர். இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்தின் சார்பில் கூறப்படும் பொழுது, கடந்த ஒரு வார காலமாக குடிநீர் வழங்கும் மின்மோட்டார் பழுது ஏற்பட்டதால், முறையாக குடிநீர் வழங் கப்படவில்லை. அது சரி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள னர்.</p>
