வடிகால் பள்ளத்தில் கொட்டப்படும் குப்பைகள் சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் அவதி
22 Mar 2026, 4:19 pm
<p><strong>வடிகால் பள்ளத்தில் கொட்டப்படும் குப்பைகள் சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் அவதி</strong></p>
<p>நாமக்கல், மார்ச் 22- குமாரபாளையம் வீதிகளில் சேகரிக்கப் படும் குப்பைகள் வடிகால் பள்ளத்தில் கொட்டுப்பட்டு வருவதால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டால் அப்பகுதி பொதுமக்கள் அவ திக்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்பட்ட 33 வார்டுகளில் தூய்மைப் பணியாளர்களால் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த குப்பைகள் ஓரி டத்தில் கொட்டி, தீ வைக்கப்படுவதால், எழும் புகையால் அப்பகுதி பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதனி டையே, கோம்பு பள்ளம் எனும்வடிகால் பள்ளத்தில் சிலர் குப்பைகளை கொட்டி வந்தனர். தற்போது வீடுகளில் சேகரிக்கப் படும் குப்பைகளை சேகரிக்கும் நகராட்சி வாகனங்களின் ஓட்டுநர்கள், தூய்மைப் பணியாளர் கள் மூலம் வடிகால் பள் ளத்தில் கொட்டி வரு கின்றனர். இதன் காரண மாக வாய்க் கால் பகுதி யில் சுகாதார சீர்கேடு அபா யம் ஏற்பட் டுள்ளது. எனவே இதனை முறைப்படுத்தி குப்பைகளை அதற்குரிய இடத்தில் கொட்டுவதற்கு உரிய நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர்.</p>
