தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விபத்துகள் ஏற்படுத்தி வந்த சாலையை சீரமைத்த பொதுமக்கள்! அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் நடவடிக்கை!

11 Jan 2026, 5:58 pm
விபத்துகள் ஏற்படுத்தி வந்த சாலையை சீரமைத்த பொதுமக்கள்! அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் நடவடிக்கை!
<p><strong>விபத்துகள் ஏற்படுத்தி வந்த சாலையை சீரமைத்த பொதுமக்கள்! அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் நடவடிக்கை!</strong></p> <p>தருமபுரி, ஜன.11- இண்டூர் அருகே விபத்துகள் ஏற்ப டுத்தி வந்த ஜல்லி பெயர்ந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், அப் பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து சாலையை சீரமைத்தனர். தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி ஒன்றியம், இண்டூர் அருகே &nbsp;பண்டஹள்ளி முதல் காளேகவுண்ட னுார் வரையிலான 4.6 கி.மீ. சாலை, &nbsp;மிகவும் சேதமடைந்து காணப்பட் டது. பொதுமக்களின் தொடர் கோரிக் கையால் கடந்த 2021 ஆம் ஆண்டு பிர தம மந்திரி கிராம சாலைகள் திட்டத் தின்கீழ் ரூ.1.78 கோடி நிதி ஒதுக்கீடு &nbsp;செய்யப்பட்டு, பணிகள் நடந்தது. சாலைப்பணி நடக்கும்போது, அப் பணி தரமற்ற முறையில் நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், இச்சாலையை, 2021 முதல், 2026 வரை பராமரிப்பு பணிக்காக, மேற்குறிப்பிட்ட நிதியி லிருந்து ஆண்டுக்கு ரூ.4 லட்சம் ஒதுக் கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், &nbsp;சாலையை முறையாக பராமரிக்காத தாலும், தரமற்ற முறையில் சாலை &nbsp;பணி மேற்கொண்டதாலும், சாலை &nbsp;அமைத்து 2 ஆண்டுகளிலேயே தார்ச் சாலை சேதமடைந்து, ஜல்லிக்கற் கள் பெயர்ந்து காணப்படுகின்றன. இச்சாலை, அதிக வளைவுகளை கொண்டுள்ளதால், இருசக்கர வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். இச்சாலையை சீரமைக்க, அப்பகுதி மக்கள் கடந்த 2 ஆண்டாக வலியு றுத்தியும், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில், எர்ரபையன ஹள்ளி ஊராட்சி, தாசன்கொட்டாயை சேர்ந்த மக்கள், விபத்து ஏற்படுவதை &nbsp;தடுக்க, சாலையில் பெயர்ந்திருந்த ஜல்லியை அவர்களாகவே அப்புறப் படுத்தினர். இனியாவது, மாவட்ட நிர் வாகம் இதுபோன்ற தரமற்ற முறை யில் சாலை அமைப்பதை தடுக்க, &nbsp;பராமரிப்புப்பணி குறித்து உரிய &nbsp;ஆய்வு மேற்கொள்ள வேண்டும். &nbsp;கிராம சாலையில் நடக்கும் விபத்து களை தடுக்க, சாலையை சீரமைக்க வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.