பொது சுத்திகரிப்பு நிலையம்: திமுக வேட்பாளர் பாலு உறுதி
8 Apr 2026, 5:30 am
<p><strong>பொது சுத்திகரிப்பு நிலையம்: திமுக வேட்பாளர் பாலு உறுதி</strong></p><p>குமாரபாளையம்: பொது சுத்திகரிப்பு நிலையம் கொண்டு வரப்படும் என ஈரோடு திமுக வேட்பாளர் பாலு வாக்கு சேகரிப்பின் போது கூறினார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கே.இ.பி.பி. பாலு போட்டியிடுகிறார்.</p><p>இவர் நேற்று குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், குமாரபாளையம் பகுதியில் நீண்ட நாள் கோரிக்கையான பொது சுத்திகரிப்பு நிலையம் கொண்டு வரப்படும் என உறுதி அளித்தார்.</p>
