தேர்வு நேரத்தில் வீடுகளை அகற்ற நடவடிக்கை: பொதுமக்கள் எதிர்ப்பு
21 Feb 2026, 4:39 pm
<p><strong>தேர்வு நேரத்தில் வீடுகளை அகற்ற நடவடிக்கை: பொதுமக்கள் எதிர்ப்பு</strong></p>
<p>சிதம்பரம், பிப்.21- சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட 33-வது வார்டு இந்திரா நகர், முத்தையா வாய்க்கால் ஓரத்தில் கடந்த 50 ஆண்டு களுக்கும் மேலாக 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வரு கின்றனர். இப்பகுதி நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக் கூறித் தனிநபர் ஒருவர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததன் பேரில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதி மன்றம் உத்தரவிட்டது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து, மூன்று மாதங்களுக்கு முன்பு அப்பகுதி யில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட குடும்ப ங்களுக்கு மாற்று இடம் பட்டாவுடன் வழங்கப்பட்டது. இந்நிலையில், வீடு களை அகற்றச் சனிக்கிழமையன்று பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் தற்போது மாணவர்களின் தேர்வு நடைபெற்று வருவதால், இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனக்கோரிக்கை வைத்த னர். அதனை ஏற்று, தேர்வு எழுதவுள்ள மாண வர்கள் வசிக்கும் 10-க்கும் மேற்பட்ட வீடு களைத் தற்காலிகமாக அகற்றாமல் விட்டு, மீதமுள்ள 18-க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்றும் பணியில் வருவாய்த்துறை அதி காரிகள் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு ஆதரவாகச் சிபிஎம் நகரச் செயலாளர் ராஜா, நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆதரவு தெரிவித்தனர்.</p>
