புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி கோரி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்
24 Feb 2026, 3:55 pm
<p><strong>புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி கோரி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்</strong></p>
<p>அரியலூர், பிப்.24- சிதலமடைந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை கட்டித் தரக்கோரியும், தாழ்வான பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்கம் தொட்டியை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட நாகம்பந்தல் ஊராட்சியில் 5, 6 ஆவது வார்டுகளில் 2000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் 6 ஆவது வார்டு பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு, சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆன நிலையில், மிகவும் சிதலமடைந்த நிலையில் உள்ளது. இதனால், அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சுத்தம் செய்ய முடியாத சூழல் உள்ளது. மேலும், கசடுகள், துரு உள்ளிட்டவை கலந்து வருவதால் அந்த குடிநீரை பருகும் அப்பகுதி மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாவதாகக் கூறுகின்றனர். இதனால், பொதுமக்களின் நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு அரசு 32 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை கட்டுவதற்கு அரசாணை வழங்கியுள்ளதாகவும், ஆனால், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு சில நபர்கள், இதனை ஒரு பிரச்சனையாக கொண்டு வந்து விட்டதாகவும் கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வாயில் முன்பு காலி குடங்களுடன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து, ஆண்டிமடம் காவல்துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.</p>
