முந்தய பக்கம்

தார் சாலை கேட்டு பொதுமக்கள் போராட்டம்

19 Mar 2026, 3:18 pm
தார் சாலை கேட்டு பொதுமக்கள் போராட்டம்
<p><strong>தார் சாலை கேட்டு பொதுமக்கள் போராட்டம்</strong></p> <p>நாமக்கல், மார்ச் 19- தார் சாலை வசதி செய்து &nbsp;கொடுக்காததால் கண்ணில் &nbsp;கருப்பு துணி கட்டி, சாலை யில் தவழ்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத் துள்ள பள்ளிபாளையம் அக் ரகாரம் பஞ்சாயத்துக்குட் பட்ட கன்னிமார் காடு, மலை &nbsp;காடு உள்ளிட்ட பகுதிகளில் &nbsp;ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இங்கு &nbsp;60 ஆண்டுகளுக்கு மேலாக பாதை பிரச் சனை உள்ள நிலையில், தற்போது இது &nbsp;தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் உள் ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு &nbsp;முன்பு பஞ்சாயத்து நிர்வாகத்தின் சார்பில் &nbsp;தார் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், பொதுமக்கள் அதிகளவு வந்து &nbsp;செல்லும் சுமார் 250 அடி தூரத்திற்கு தார் &nbsp;சாலை அமைக்கப்படாததால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் பள்ளி, கல்லூரி &nbsp;செல்லும் மாணவ, மாணவியரும் அவதிக் குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதி பொதுமக்கள் வியாழனன்று அதிகாரிகளின் மெத்தன போக்கை கண்டித்தும், உடனடியாக மீத முள்ள பகுதிக்கும் தார் சாலையை அமைத்து &nbsp;தர வேண்டும் என வலியுறுத்தி கண்ணில் &nbsp;கருப்பு துணி கட்டி, சாலையில் தவழ்ந்து &nbsp;போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரண மாக அங்கு பரபரப்பான சூழல் நிறுவியது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும் &nbsp;பொழுது, தார் சாலை அமைக்கப்படாமல் உள்ள இடம் நீதிமன்ற வழக்கில் உள்ளதால், &nbsp;அதில் தார் சாலை அமைத்தால் வேறு வித மான பிரச்சினைகள் ஏற்படும். இதனால், அங்கு தார் சாலை அமைக்கப்படவில்லை. நிலத்தின் உரிமையாளர் மற்றும் பொது மக்கள் அரசு அதிகாரியுடன் கலந்தாய்வு மேற் கொண்டு பொதுமக்களின் கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram