வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் தர்ணா!
12 Dec 2025, 3:12 pm
<p>தருமபுரி, டிச.12- அரூர் அருகே வழிப்பாதை பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்காத வருவாய்த்துறையை கண்டித்து கோட்டாட்சியர் அலுவ லகம் முன்பு பொதுமக்கள் தர்ணா வில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த அச்சல்வாடி அருகே உள்ள ஒடசல்பட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில், சேலம் உருக்காலைக்காக தங்க ளின் விவசாய நிலங்களை வழங் கிய 20க்கும் மேற்பட்ட குடும்பத்தின ரும் வசித்து வருகின்றனர். இந்நி லையில், சுமார் 40 வருடங்களுக்கு மேலாக இவர்கள் சென்று வந்த பாதையை, தனிநபர் ஒருவர் ஆக்கி ரமிப்பு செய்துள்ளார். இந்த ஆக்கிர மிப்பை அகற்றக்கோரி பல வரு டங்களாக வருவாய்த்துறையிடம் முறையிட்டும், எந்தவொரு நடவ டிக்கையும் எடுக்கப்படாததால், நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த தீர்ப்பில், பாதை ஆக்கிர மிப்பை அகற்ற நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என உத்தர விடப்பட்டது. ஆனால், இத்தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் வரு வாய்த் துறையினர் மெத்தனப் போக்கில் இருந்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரி டம் புகாரளிக்கப்பட்டது. இருப்பி னும், தற்போது வரை தனிநபர் ஆக் கிரமிப்பை அகற்றப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்ப குதி மக்கள் வெள்ளியன்று தங்க ளது பள்ளி குழந்தைகளுடன் அரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட னர். அப்போது வருவாய் கோட் டாட்சியர் செம்மலை, மீண்டும் ஒரு மனுவை எழுதி தங்களிடம் ஒப்ப டைக்க வேண்டுமென தெரிவித்த தாகவும், திங்கட்கிழமைக்கு மேல் நடவடிக்கை மேற்கொள்வோம் என்றதாக, பொதுமக்கள் தெரிவித் தனர். மேலும், கோரிக்கைக்கு செவி சாய்க்காத வருவாய்த்துறையை கண்டித்து தங்களின் ரேசன் கார்டு, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங் களை வளாகத்திலேயே வீசி விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
