கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
7 Dec 2025, 3:52 pm

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

கோவை, டிச.7- சூலூர் அருகே நீரோடையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதை வருவாய்த்துறையினர் உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள கண்ணம் பாளையம் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் இருக்கும் நீரோ டையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு சூலூர் வட்டாட்சியர் மூலம் நில அளவீடு செய்த போது, சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான 22 சென்ட் நிலம் ஆக்கிர மிப்பில் உள்ளது தெரியவந்தது. அதனை மீட்டு குடிநீர் வாய்க் கால் மற்றும் சாலை அமைத்துத்தர பொதுமக்கள் வலியு றுத்தி வந்த நிலையில், வருவாய்த்துறை காலம் தாழ்த்தி வந் தது. இதனால் அப்பகுதி மக்கள், கழிவுநீர் வாய்க்கால் மற் றும் சாலை வசதி இல்லாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்த னர். தற்போது மழையின் காரணமாக அந்த பாதையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அடிக்கடி விபத்திற் குள்ளாகி வருகின்றனர். இதனால் ஆவேசமடைந்த பொது மக்கள் கண்ணம்பாளையம் நாகையன் தோட்டப்பகுதியி லுள்ள பிரச்சனைக்குரிய பகுதியில் ஞாயிறன்று கருப்புக் கொடியுடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி நேரில் வந்து போராட் டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார். இதையடுத்து சூலூர் மண்டல வட்டாட்சியர் அம்பிகா, சம்பவ இடத்திற்கு வந்து, ஒரு வாரத்திற்குள் நீரோடை ஆக்கிரமிப்பு பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு, சாலை அமைத்து தர ஆவண செய்யப்படும், என் றார். அதனையேற்று பொதுமக்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மாவட்ட நிர்வா கம் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால், வட்டாட்சியர் அலுவல கத்தை முற்றுகை இடுவதுடன், சாலை மறியல் போன்ற தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரி வித்தனர்.

காவல் அதிகாரிக்கு கொலை மிரட்டல்; கைது

நாமக்கல், டிச.7- காவல் உதவி ஆய்வாளருக்கு சமூக வலைத்தளம் மூலம் கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். ஈரோடு, கிருஷ்ணா தியேட்டர் அருகே வெள்ளியன்று போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ் வழியாக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளை ஞரை நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் எண்ணும், ஆர்சி புக்கில் உள்ள பெயரும் மாறி இருந்ததால், இதை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர். அப்போது அவர் அளவுக்கு அதிகமான போதையில் இருந்ததோடு, போலீசாரு டன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் உதவி ஆய்வா ளர் சந்திரசேகர் என்பருடன் தகராறில் ஈடுபட்டதோடு, சமூக வலைத்தளத்தில் காவலர் பெயரை குறிப்பிட்டு, ‘உன்னை கொல்லாமல் விடமாட்டேன்’ என பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அவர் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், காவேரி ஆர்.எஸ் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பதும், தன்னுடைய சமூக வலைத்தள கணக் குகளில் ரவுடியை போல பாவித்துக்கொண்டு தொடர்ந்து வீடி யோக்களை பதிவேற்றம் செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத் தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

சிசுவின் பாலினத்தை தெரிவித்த 2 பேர் கைது

நாமக்கல், டிச.7- ராசிபுரம் அருகே கருவிலுள்ள சிசு வின் பாலினத்தை கண்டறிந்து தெரி வித்த செவிலியர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த மெட்டாலா கோரையாறு பகுதி யில் சட்டவிரோதமாக கருவிலுள்ள குழந்தையின் பாலினத்தை கண்ட றிந்து கூறுவதாக ராசிபுரம் அரசு மருத்து வமனை மருத்துவ அலுவலர் கலைச் செல்விக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சனியன்று கலைச்செல்வி தலை மையில் மருத்துவக்குழுவினர் மற்றும் நாமகிரிப்பேட்டை காவல் துறை யினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஒரு வீட்டில் வைத்து சட்ட விரோதமாக போர்ட்டபிள் அல்ட்ரா ஸ்கேன் மூலம் கருவிலுள்ள சிசுவின் பாலினத்தை கண்டறியும் சோதனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பரி சோதனையில் ஈடுபட்ட 2 பெண்கள் மற் றும் ஸ்கேன் இயந்திரம், மருந்து, மாத்தி ரைகள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்து, 2 பெண்களை கைது செய்தனர். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த கலைமணி (46) என்பவர், தொட வூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை செவிலியராக பணியாற்றி யுள்ளார். அப்போது சட்ட விரோத மாக சிசுவின் பாலினத்தை கண்டறி யும் சோதனையில் ஈடுபட்டு, கடந்த பிப்ர வரி மாதம் கைது செய்யப்பட்டு, பணியி டை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த பூமணி (45) என்பவர் உதவியாக செயல் பட்டது தெரியவந்தது. இதன்பின் இரு வரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி, சேலம் சிறையில் அடைத்தனர்.

மாணவர்களுக்கு தரமற்ற மிதிவண்டி வழங்கல்

கோவை, டிச.7- தங்களுக்கு தரமற்ற மிதிவண்டிகள் வழங் கப்பட்டதாக, ஒண்டிப்புதூரில் அரசுப்பள்ளி மாணவர்கள் குற்றச்சாட்டினர். கோவை, ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் அதிகாரிகள் கலந்து கொண்டு 117 மாண வர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினர். ஆனால், வழங்கியதுமே, அவை ஓட்டும் நிலையில் இல்லை என்று தெரிவித்த மாண வர்கள், பாகங்களும் தரமற்று இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து மாண வர்கள் கூறுகையில், எங்களுக்கு காற்றில் லாத டயர்களுடன் தான் சைக்கிள்கள் வழங் கப்பட்டன. சில சைக்கிள்களில் டியூப் வால்வு கள் இல்லை; பிரேக்குகள் சரியாக பொருத் தப்படவில்லை. இதனால் பள்ளியிலிருந்து நேராக பழுது பார்க்கும் கடைக்கு செல்ல வேண்டிய நிலை தான் ஏற்பட்டது, என்ற னர்.