மின்சார வசதி கேட்டு பொதுமக்கள் போராட்டம்
16 Mar 2026, 4:46 pm
<p><strong>மின்சார வசதி கேட்டு பொதுமக்கள் போராட்டம்</strong></p>
<p>நாமக்கல், மார்ச் 16- கடந்த 5 ஆண்டுகளாக இருட்டில் தவிக்கும் தங்க ளுக்கு மின்சார வசதி வழங்க வலியுறுத்தி ஆவத்திபாளை யம் ராமகிருஷ்ணா நகரில் அப்பகுதி பொதுமக்கள் கருப்பு கொடியுடன் போராட் டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத்திபாளையம் ராமகி ருஷ்ணா நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு சுமார் 54-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மின் இணைப்பு இல்லாத நிலை உள்ளது. இந்து சமய அற நிலை துறைக்கு சொந்தமான இந்த இடத்தில் பொதுமக்கள் வசித்து வரும் நிலையில் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக இருட்டில் தவிக்கும் தங்களுக்கு மின்சார வசதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதியில் சேர்ந்த பொதுமக்கள் திங்க ளன்று ராமகிருஷ்ணா நகரில் கருப்புக் கொடியை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மின் இணைப்பு வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப் பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீ சார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் மின்சாரம் கிடைப்பதற் கான நடவடிக்கைகள் எடுப்பதாக தெரி வித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.</p>
