தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பூமலூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டம்

13 Nov 2025, 3:30 pm
பூமலூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டம்
<p><strong>பூமலூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டம்</strong></p> <p>திருப்பூர், நவ.13- பல்லடம் ஒன்றியம் பூம லூர் ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் குடிநீர் இன்றி தவிப்பதாக, பூமலூர் பிரி வில் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட முயன்றனர். &nbsp;15 நாட்களில் பிரச்சனை களை சரி செய்வதாக அலுவ லர்கள் உறுதி அளித்ததை அடுத்து, போராட்டம் முடி வுக்கு வந்தது. பல்லடம் ஒன்றியம், பூமலூர் ஊராட்சிக் &nbsp;குட்பட்ட வெங்கடேஸ்வரா நகர், சரஸ்வதி கார்டன், கே.கே.கார்டன், கே.கே.ஜி.கார்டன், &nbsp;எஸ்.எஸ்.கே.கார்டன், எஸ்.எஸ்.எம் கார்டன் &nbsp;உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட &nbsp;குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் கூறியதாவது: இப்பகு தியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. மேலும், வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணற் றில் நிலத்தடி நீர் மாசடைந்து பயன்படுத்த முடி யாத நிலையில் உள்ளன. இதனால் அன்றாட &nbsp;பயன்பாட்டிற்காக ரூ.8 ஆயிரம் கொடுத்து தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலை சூழல் &nbsp;நிலவுகிறது. மேலும் இப்பகுதியில் தெரு &nbsp;விளக்கு இல்லாததால், இருள் சூழ்ந்து &nbsp;காணப்படுகிறது. பெண்கள், குழந்தை கள் தெருவில் செல்வது பாதுகாப்பில்லாத நிலையாக உள்ளது. சில நேரங்களில் சட்ட விரோத செயல்களும், வழிப்பறி சம்பவங் களும் அரங்கேறி வருகிறது.காவல்துறையி னர் பாதுகாப்பு அளிக்க வேண்டும். பூமலூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து &nbsp;தர வேண்டும் என பலமுறை அலுவலர்க ளிடம் மனு அளித்தும். நடவடிக்கை எடுக்க வில்லை என்று தெரிவித்தனர். &nbsp;இந்நிலையில் இப்பகுதி மக்கள் வியாழ னன்று மங்கலம் - பல்லடம் சாலை பூமலூர் பிரி வில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட &nbsp;முயன்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத் திற்கு வந்த மங்கலம் போலீசார், பூமலூர் &nbsp;ஊராட்சி செயலர் ஆகியோர் பேச்சுவார்த்தை &nbsp;நடத்தினர். அதில் 15 நாட்களில் பிரச்சனை களை சரி செய்வதாக தெரிவித்ததை அடுத்து &nbsp;பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.