ஒகேனக்கல் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்
30 Jan 2026, 5:56 pm
<p><strong>ஒகேனக்கல் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்</strong></p>
<p>தருமபுரி, ஜன.30- ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் செய்யக்கோரி, காலிக்குடங்களுடன் பொதுமக்கள் வெள்ளியன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், மாதேமங்கலம் ஊராட்சிக் குட்பட்ட வெங்கட்டம்பட்டியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாதேமங்கலம் - வெங்கட்டம் பட்டி சாலை விரிவாக்கப்பணி நடை பெற்றது. அப்பொழுது குடிநீர் குழாய் கள் ஆங்காங்கே துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், சாலைப்பணி தொடங்கி யதிலிருந்து வெங்கட்டம்பட்டி கிராமத் தில் ஒரு சில பகுதிகளுக்கு குடிநீர் விநி யோகம் செய்யப்படவில்லை. இதனால் அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வந்து பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். குடிநீர் குழாய் களை சீரமைத்து முறையாக குடிநீர் விநி யோகம் செய்ய வேண்டும் என கிராம மக்கள் பலமுறை முறையிட்டனர். ஆனால், ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததால், ஆவேசம டைந்த கிராமமக்கள் காலிக்குடங்களு டன் வெங்கட்டம்பட்டி - தருமபுரி சாலை யில் அமர்ந்து, மறியலில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவலறிந்த அதிய மான்கோட்டை காவல் துறையினர், ஊராட்சி செயலாளர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொ ழுது முறையான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் வழங்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தினர். இதைத்தொ டர்ந்து தற்காலிகமாக டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுவ தாகவும், துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாய் களை உடனடியாக சீரமைத்து முறை யான குடிநீர் விநியோகம் செய்ய நடவ டிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி யளித்தனர். அதன்பேரில் பொதுமக் கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.</p>
