நெசவாளர்கள் காலனிப் பகுதிக்கு பாதை கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
12 Nov 2025, 3:20 pm
<p><strong>நெசவாளர்கள் காலனிப் பகுதிக்கு பாதை கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>அவிநாசி, நவ.12- திருமுருகன்பூண்டி நக ராட்சிக்குட்பட்ட நெசவா ளர் காலனிப்பகுதியில் பாதை அமைத்து தரக் கோரி புத னன்று பொதுமக்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், திருமுருகன் பூண்டி நகராட் சிக்குட்பட்ட நல்லாற்றிலி ருந்து, நெசவாளர் காலனி பகுதிக்கு சாலை அமைத்து தர வேண்டும். திருப்பூரில் இருந்து அவிநாசி செல்லும் சாலையில் திரு முருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட சென் டர் மீடியனில் உள்ள சோலார் விளக்குகள் சரிவர எரிவதில்லை, இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதை சீரமைத்து தர வேண்டும். மக்களுடன் முதல்வர் திட்ட ஸ்டாலின் முகாமில் செலவு செய்தது குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தில் தகவல் பெறப்பட்டது. இதில் ரூ.5 லட்சத்திற்கும் மேல் முறைகேடு நடைபெற்றுள்ளது. இது பற்றி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். திருமுரு கன்பூண்டி நகராட்சிப் பகுதியில் எந்தவித முன் அனுமதியும் பெறாமல், சாலைகளை குழி தோண்டுவதும், அதை சரிவர மூடாமலும் விடு கின்றனர். இதனால் விபத்து ஏற்படுகிறது. எனவே உடனடியாக சாலைகளை சீரமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத் தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசி யல் இயக்கத்தினர் பங்கேற்றனர். பொதுமக் கள் சார்பில் முன்வைத்த கோரிக்கைகளை மனுவாக தயார் செய்து நகராட்சி நிர்வாகத் திடம் அளித்தனர்.</p>
