தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தனியார் காற்றாலை டவரை அகற்றக்கோரிக்கை ரேஷன் கார்டை வீசி எறிந்து பொதுமக்கள் போராட்டம்

19 Jan 2026, 2:23 pm
தனியார் காற்றாலை டவரை அகற்றக்கோரிக்கை  ரேஷன் கார்டை வீசி எறிந்து பொதுமக்கள் போராட்டம்
<p><strong>தனியார் காற்றாலை டவரை அகற்றக்கோரிக்கை &nbsp;ரேஷன் கார்டை வீசி எறிந்து பொதுமக்கள் போராட்டம்</strong></p> <p>தூத்துக்குடி, ஜன.19- கயத்தாறில், தனியார் காற்றாலை டவரை அகற்றக்கோரி பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டைகளை சாலையில் வீசி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா வெள்ளாளங்கோட்டை பஞ்சா யத்துக்கு உட்பட்ட சூரியமினிக்கம் கிரா மத்திற்கு மேற்கே அமைந்துள்ள குளத்தின் உள்ளே தனியார் காற்றாலை நிறுவனத்துக்கு சொந்தமான 7 மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு மின் கம்பி கள் பொருத்தும் பணிகள் நடந்து வரு கிறது. மின் கோபுரங்கள் அமைத்தால் விவ சாயம் பாதிக்கப்படுவதோடு, கால்நடைக ளுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி பொதுமக்கள் கடந்த 6 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்று கூறி கயத்தாறு தாலுகா அலுவலகத்தை சுமார் 300 குடும்பங்களை சேர்ந்த பெண்களும் ஆண்களும் முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள் தங்களது ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும், குடும்ப அட்டைகளை சாலையில் வீசி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தாசில்தார் அப்பனராஜ், வருவாய் ஆய்வாளர் ரமேஷ், மற்றும் இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். உயர் மின் &nbsp;கோபுரத்தை அகற்றும் வரை ஓய மாட்டோம் என்று பொதுமக்கள் ஒரே முடிவாக கூறினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.