கூடுதல் கட்டண வசூலை கண்டித்து தனியார் பேருந்தை பொதுமக்கள் முற்றுகை
11 Jun 2026, 9:39 pm

கூடுதல் கட்டண வசூலை கண்டித்து தனியார் பேருந்தை பொதுமக்கள் முற்றுகை

ஒட்டன்சத்திரம்,ஜூன் 11- தனியார் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல் செய்ததை கண்டித்து பொது மக்கள் தனியார் பேருந்தை தடுத்து நிறுத்தி முற்றுகை யிட்டனர்.

மதுரையில் இருந்து பழனி செல்லும் ஏ.எம்.எஸ். என்ற தனியார் பேருந்தில் கன்னிவாடி இருந்து ஒட்டன் சத்திரத்திற்கு செல்லவ தற்கு வழக்கமான பயண கட்டணம் 15 ரூபாய்க்கு பதி லாக 5 ரூபாய் கூடுதலாக ரூ. 20 கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது .

ஆனால் எவ்வித தமிழக அரசு அறிவிப்பும் இல் லாமல் குறிப்பிட்ட ஒரு தனி யார் பேருந்தில் மட்டும் ரூ. 5 கூடுதலாக பயணிகளிடம் வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் வியா ழக்கிழமை மதுரையில் இருந்து பழனி நோக்கி வந்த தனியார் பேருந்தை கன்னிவாடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சக்தி வேல் தலைமையில் பொது மக்கள் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டு கூடுதல் கட்டணம் பயணிகளிடம் வசூல் செய்வதை கண்டி த்து முழக்கமிட்டனர்.

இதனால் பரபரப்பு ஏற் பட்டது. தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தில் தெரிவித்ததின் படி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தனியார் பேருந்து நடத்து னர் தெரிவித்தார். இனி இது போல் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பெரும் போ ராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை செய்து பொது மக்கள் அனுப்பி வைத்த னர்.