சிதம்பரத்தில் ஏழை மக்களின் வீடுகள் அகற்றப்படுவதை தடுக்க கோரிக்கை கே. பாலகிருஷ்ணன், கி. வீரமணியிடம் பொதுமக்கள் மனு
9 Dec 2025, 4:25 pm
<p><strong>சிதம்பரத்தில் ஏழை மக்களின் வீடுகள் அகற்றப்படுவதை தடுக்க கோரிக்கை கே. பாலகிருஷ்ணன், கி. வீரமணியிடம் பொதுமக்கள் மனு</strong></p>
<p>சிதம்பரம், டிச.9- சிதம்பரத்தில் ஏழை மக்களின் வீடுகளை அகற்று வது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைக்குழு உறுப்பினர் கே. பால கிருஷ்ணன், திராவிட கழக தலைவர் கி. வீர மணியிடம் அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் மனு அளித்தனர். சிதம்பரம் அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் சிதம்பரம் நகரத்தில் ஆயி ரத்துக்கும் மேற்பட்ட இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று இடம் கேட்டும் நீர்நிலை ஆக்கிரமிப்பு. கோயில் ஆக்கிரமிப்பு. அரசு இடம் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் ஆர்எஸ் எஸ், பிஜேபி சமூக விரோத சக்திகள் நீதி மன்றங்கள் மூலமாக தீர்ப்புகளை பெற்று ஏழை எளிய மக்களின் வீடுகளை அகற்றும் நடவடிக்கையை கண்டித்தும் இது போன்ற தீர்ப்புகளுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறை யீடு செய்து ஏழை மக்களை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் நகரத்திற்கு வருகை தந்த சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பால கிருஷ்ணன்,திராவிட கழக தலைவர் கி. வீர மணி ஆகியோர்களிடம் ஆதரவு கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் பழ.வாஞ்சி நாதன், நகர செயலாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் மல்லிகா, முத்துக்குமரன், இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் ராஜா சம்பத் குமார், விசிக கிழக்கு மாவட்ட செயலாளர் அரங்க தமிழ் ஒளி, நகர செயலாளர்கள் கோவி பாவணன், ஆதிமூலம், சிபிஐ மாவட்ட துணை செய லாளர் வி.எம் சேகர், வட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி, தேமுதிக நகர செயலாளர் பால கிருஷ்ணன், திராவிட கழக மாவட்ட தலைவர் பூசி இளங்கோவன், மாவட்ட துணை செயலாளர் சித்தார்த்தன், மதிமுக செயலாளர் குமார், மாவட்ட துணை செய லாளர் பார்த்திபன், மனித நேய மக்கள் கட்சியின் நகர செயலாளர் சாகுல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணை தலைவர் ஜக்கரியா உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்ட னர்.</p>
