சிபிஎம் மாநிலச் செயலாளரிடம் பொதுமக்கள் மனு
6 Feb 2026, 5:17 pm
<p><strong>சிபிஎம் மாநிலச் செயலாளரிடம் பொதுமக்கள் மனு</strong></p>
<p>நாமக்கல் மாவட்டம், பொன்னேரி கைகாட்டி பகுதியில், பொதுமக்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்த வண்டிப்பாதையை தனி நபர்கள் ஆக்கிரமித்திருப்பதால், பொது மக்கள் நடந்து செல்லா முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கத்தினர் தொடர்ச்சியாக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டுவதால், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் வியாழனன்று மனு அளித்தனர். உடன், மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.</p>
