பொதுக்கூட்ட வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல்
21 Nov 2025, 2:51 pm
<p><strong>பொதுக்கூட்ட வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல்</strong></p>
<p>சென்னை, நவ. 21 - அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்வதற்கும் சாலை வலம் நடத்து வதற்குமான வழிகாட்டு விதிமுறை கள் தொடர்பான வரைவு அறிக்கை யை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வெள்ளிக்கிழமை (நவ.21) தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பான 25 பக்க அறிக்கை மற்றும் ஆவணங்களில், "தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை களில் பொதுக்கூட்டம் மற்றும் சாலை வலம் நடத்த சம்பந்தப்பட்ட துறை களின் அனுமதியை பெற வேண்டும். நிகழ்ச்சிகளுக்கு 10 நாட் களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். கூட்டத்தினரின் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே முழுப் பொறுப்பு. நிகழ்ச்சியின் போது பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேத மடைந்தால் அதற்கான இழப்பீட்டை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே ஏற்க வேண்டும். நிகழ்ச்சி முடிந்த பின் அந்த இடத்தை முழுமையாக தூய்மை செய்து வழங்க வேண்டும். 50 ஆயிரம் பேருக்கு மேல் திரள்வார்கள் என எதிர்பார்க்கக் கூடிய கட்சி மாநாடுகள் போன்ற நிகழ்வுகளுக்கு 30 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.</p>
