பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாத்தனூர் அணையில் குவிந்த பொதுமக்கள்
18 Jan 2026, 4:50 pm
<p><strong>பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாத்தனூர் அணையில் குவிந்த பொதுமக்கள்</strong></p>
<p>திருவண்ணாமலை, ஜன.18- சுற்றுலா தலமாக விளங்கும் சாத்தனூர் அணையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் காணும் பொங்கல் மற்றும் ஞாயிறு கிழமைகளில் குடும்பத்துடன் குவிந்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூரில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட சாத்தனூர் அணை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணையில் தற்போது 118.65 அடி நீர்மட்டம் உள்ளது. ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சாத்தனூர் அணைக்கு வந்து காணும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடுவார்கள். அதுபோல் நடப்பு ஆண்டும் காணும் பொங்கலை முன்னிட்டு சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் காலை முதலே சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் குடும்பத்துடன் வருகை தந்தனர். திருவண்ணாமலை, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர். எழில் நிறைந்த மலர் பூங்காக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கம், மீன் கண்காட்சி, முதலைப்பண்ணை , ஆதாம் ஏவாள் பூங்கா ,அறிவியல் பார்க், தொங்கு பாலம், மயில் கூண்டு,முயல் கூண்டு,டைனோசர் பார்க், என சுற்றுலா பயணிகளை கவரும் அம்சங்கள் நிறைந்த சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் காணும் பொங்கலை குடும்பத்துடன் இணைந்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். பல்வேறு பகுதிகளிலிருந்து சாத்தனூர் அணைக்கு குவிந்த சுற்றுலா பயணிகள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூங்காவில் ஊஞ்சல் ஆடியும்,சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனர்,நீச்சல் குளத்தில் குளித்தும், படகு சவாரி செய்தும், முதலைப்பண்ணையை பார்த்தும் மகிழ்ந்தனர்.</p>
