தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோதையாற்றில் திரியும் முதலைகளால் பொதுமக்கள் அச்சம்

22 Jan 2026, 2:57 pm
கோதையாற்றில் திரியும் முதலைகளால் பொதுமக்கள் அச்சம்

கோதையாற்றில் திரியும் முதலைகளால் பொதுமக்கள் அச்சம்

படகில் தேடும் பணியில் வனத்துறையினர்

அருமனை, ஜன.21- கோதையாற்றில் திரியும் முத லைகளால் பொதுமக்கள் அச்சம டைந்துள்ளனர். அதனை உடனடி யாக பிடிக்க வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து முதலையை பிடிக்க படகில் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட பாத்திமா சாலை கோட்ட வாரம் பகுதியில் கோதையாற்றின் நடுவே அமைக்கப்பட்டுள்ள உறை கிணற்றில் மேல் ஒரு முதலை படுத்திருந்ததாக சமூக வலை தளங்களில் வீடியோ பரவியது.  இந்நிலையில் பொதுமக்கள் பலரும் முதலைகளை பார்த்ததாக கூறியுள்ளனர். இதுகுறித்து  வனத் துறையினரிடம் புகார் அளித்துள் ளனர். புதன்கிழமையன்று உறை கிணற்றிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் கரையோரம் ஒரு பெரிய முதலை படுத்து கிடந்ததை அப்பகுதி வழியாக சென்ற வாலி பர்கள் பார்த்துள்ளனர். அப்போது தங்களின் செல்போன்களில் முதலையை படம் பிடித்துள்ளனர். பின்னர் மக்கள் சத்தம் கேட்டு அந்த முதலை ஆற்றுக்குள் சென்று விட்டது. இதை அடுத்து சிறிது நேரம் கழித்து உறை கிணற்றின் மேல் மற்றொரு முத லையும் படுத்திருந்ததாக தெரி கிறது.  விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரு கின்றனர்.இதனால்  மக்களின் சத்தம் கேட்டு முதலைகள் வெளியே வரவில்லை. முதலை களால் சுற்றுலா பயணிகள் வருகை குறையும் .அப்போது  மீண்டும் முதலைகள் ஆற்றிலிருந்து வெளி யே வரத் துவங்கும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.   கோதையாற்றில் இரண்டு முத லைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவற்றை பிடிக்கும் முயற்சியில் வனத்துறை யினர் படகில் தேடும் பணியில் ஈடு பட்டுள்ளனர்.   முதலைகளை பிடிப்பதற்கு படகில் சென்றால் மட்டும் போதாது. இரு புறங்களிலும் வலைகள் அமை த்து அதில் சிக்க வைக்க வேண்டும் என்று வனத்துறையினரிடம் பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.   ஆட்சியருக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் ஆற்றில் குளிக்கவும், கால் நடைகளுக்கு தண்ணீர் கொடுக்க வும் கொண்டு செல்ல மக்கள் அச்ச மடைந்து உள்ளனர். இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குமரி மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.சேகர் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளார்.  அதில், கடையாலுமூடு  ஆற்றுப் பகுதியில் முதலை உள்ளதாக மக்கள் அச்சமடைந்து உள்ளனர். அதைப்போல் பேச்சிப்பாறை பகுதியில் சிறுத்தை உள்ளதாகவும் அச்சமடைந்து உள்ளனர். எனவே,  தாங்கள் ட்ரோன் மூலம் அதனை கண்காணித்து மக்களை காக்க வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.