நுள்ளிவிளை ரயில்வே மேம்பாலம் பணியால் வாகன ஓட்டிகள் அவதி நிகழும் விபத்துகளால் பொதுமக்கள் அச்சம்
4 Mar 2026, 5:01 pm
<p><strong>நுள்ளிவிளை ரயில்வே மேம்பாலம் பணியால் வாகன ஓட்டிகள் அவதி நிகழும் விபத்துகளால் பொதுமக்கள் அச்சம்</strong></p>
<p>நாகர்கோவில், மார்ச் 4- கன்னியாகுமரி மாவட்டம் நுள்ளிவிளை யில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கள் நடப்பதால் நுள்ளிவிளை - பேயன் குழி இரட்டைக்கரை சானல் வழியாக திருப்பிவிடப்படும் வாகனங்கள் விபத்து க்கு உள்ளாவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில், இரட்டை ரயில் பாதை பணிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடை யிலான நுள்ளிவிளை ரயில்வே பாலத்தை இடித்து விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டது. தோட்டியோடு– திங்கள் நகர் பிரதான சாலையில் பாலம் அமைந்துள்ளதால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாலம் இடிக்கப்பட்டால், சுற்றியுள்ள சுமார் 20 கிராம மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்படும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தலையீட்டின் பேரில் சுமார் 3 மாதங்கள் வரை கால அவகாசம் கிடைத்தது. இந்நிலையில் வேறு வழி யின்றி ஜனவரி 29 அன்று முதல் நுள்ளி விளை ரயில்வே பாலம் இடிக்கும் பணி தொடங்கியது. அதைத் தொடர்ந்து பரசேரி யில் இருந்து கொன்னக்குழிவிளை 4 வழிச் சாலை வழியாக போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. நுள்ளிவிளையை கடந்து செல்லும் வாகனங்கள் குறுகலான இரட்டைக்கரை சானல் கரை வழியாக தேசிய நெடுஞ்சாலையை அணுக வேண்டும். அதிக அளவில் பேருந்துகளும் இதர வாகனங்களும் இயக்கப்படும் நிலை உள்ளது. இந்நிலையில் புதனன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று இரட்டைக்கரை சானலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. பாலம் பணியை விரைவாக முடித்து விபத்துகளை தவிர்க்க ரயில்வேயும் நெடுஞ்சாலைத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.</p>
<p> </p>
