மரக்காணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மையம் அமைத்திட பொதுமக்கள் கோரிக்கை
9 Nov 2025, 4:12 pm
<p><strong>மரக்காணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மையம் அமைத்திட பொதுமக்கள் கோரிக்கை</strong></p>
<p>மரக்காணம், நவ. 9 – மரக்காணம் அரசு பொது மருத்துவ மனையில் மீண்டும் பிரேத பரி சோதனை மையம் செயல்பட நட வடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மரக்காணம் பேரூராட்சி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த அரசு மருத்துவமனையை நம்பியுள் ளனர். இப்பகுதியில் உள்ள பெரும் பாலானோர் விவசாயிகள், மீனவர் கள், உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் ஆவர். இப்பகுதி கிழக்குக் கடற்கரைச் சாலையின் அருகில்அமைந்துள்ளது. இச்சாலையின் வழியாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினந்தோறும் சென்று வருகின்றன. இதனால், சில நேரங்களில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் தவிர்க்க முடி யாத உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. விபத்துகளில் உயிர் இழந்தவர்கள் மற்றும் சந்தேக மரணம், தற்கொலை, கொலை போன்ற மரணங்கள் ஏற்பட்டால், அவற்றை வழக்குப் பதிவு செய்து, உடலை பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆனால், மரக்காணம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரி சோதனை மையம் தற்போது இல்லை. இதனால், இறப்பவர்களின் உடலைப் பிரேத பரிசோதனை செய்ய புதுச்சேரி மாநிலம் அல்லது திண்டி வனம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைக்குத்தான் எடுத்துச் செல்ல வேண்டிய நிலை இருப்ப தாகப் பொதுமக்கள் தெரிவிக்கின் றனர். சுமார் 30 முதல் 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போது, அதிக கால விரையமும், பண விரையமும் உண்டா கிறது. மரக்காணத்தில் உள்ள அரசுப் பொது மருத்துவமனையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பிரேத பரிசோதனை மையம் இருந்துள் ளது. ஆனால், ஏதோ காரணத்தினால் தற்போது இந்த மையம் செயல்பட வில்லை. எனவே, இப்பகுதி 50 கிராம மக்களின் நலன் கருதி, மரக்காணத்தில் உள்ள அரசுப் பொது மருத்துவமனை வளாகத்தில் பிரேத பரிசோதனை மையத்தைச் செயல்படுத்தச் சம்பந் தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். கோரிக்கை வலுத்து வருகிறது.</p>
