சிதம்பரம் பேருந்து நிலைய கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
19 Nov 2025, 3:33 pm
<p><strong>சிதம்பரம் பேருந்து நிலைய கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை</strong></p>
<p>சிதம்பரம், நவ.19- சிதம்பரம் நகரம் ஆன்மிகம் மற்றும் சுற்றுலா நகரமாக உள்ளது. இங்கு நடராஜர் கோயில், பிச்சாவரம் சுற்றுலா மையம், அண்ணாமலைப் பல்கலைக்கழ கம் ஆகியவை உள்ளதால் தினந்தோறும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள், மாண வர்கள் , பொதுமக்கள் என வெளியூர்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். சிதம்பரம் பழைய பேருந்து நிலைய கட்டிடம் அமைக்கப்பட்டு 40 ஆண்டு களுக்கு மேல் கடந்த நிலையில் கட்டி டங்கள் பழுதாகி சிதிலமடைந்து, சிமெண்ட் காரைகள் பயணிகளின் மேல் விழுந்து காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பேருந்து நிலையத்தில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பழைய பேருந்து நிலையக் கட்டிடத்தை இடித்துவிட்டு ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக ஷெல்டர் அமைக்கும் பணிகள் தொடங்கியது. பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் மழை உள்ளிட்ட சில காரணங்களால் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டு வருகிறது. ஒரு பகுதியில் பணிகள் நடைபெறுவதால் அனைத்து பேருந்து களும் பழைய பேருந்து நிலையத்திற்குள் செல்வதில் சிரமம் ஏற்படுவதோடு பொது மக்கள் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. எனவே பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்படும் ஷெல்டர் பணிகளை முழுவதுமாக விரைந்து முடித்து பயணிகளின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் புதிய பேருந்து நிலை யம் சிதம்பரம் அருகே லால்புரம் ஊராட்சி யில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் தொலை தூர பேருந்துகள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி களையும் விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p>
