முந்தய பக்கம்

சாலையில் பேராபத்தை விளைவிக்கும் பள்ளங்கள் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

4 Jan 2026, 5:55 pm
சாலையில் பேராபத்தை விளைவிக்கும் பள்ளங்கள்  சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
<p><strong>சாலையில் பேராபத்தை விளைவிக்கும் பள்ளங்கள் &nbsp;சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை</strong></p> <p>ராணிப்பேட்டை, ஜன. 4- &nbsp;ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் போதிய பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக மாறியுள் ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள் ளாகி வருகின்றனர். குறிப்பாக, மாந்தாங்கல் எம்பிடி கிராஸ் சாலையில் நான்குக்கும் மேற்பட்ட ராட்சத பள்ளங்கள் உருவாகி யுள்ளன. சாலையின் மையப்பகுதியிலேயே இந்தப் பள்ளங்கள் இருப்பதால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாவது தொடர் கதையாகி வருகிறது. இப்பகுதி ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிலையங்களுக்குச் செல்லும் முக்கிய வழித்தடமாகும். மழைக்காலங் களில் பள்ளங்களில் நீர் தேங்குவதால் அதன் ஆழம் தெரியாமல் வாகனங்கள் சிக்கிக் கொள்கின்றன. எனவே, பெரும் உயிர்ச் சேதம் ஏற்படும் முன், மாவட்ட நிர்வாகமும் நெடுஞ்சாலைத் துறையும் போர்க்கால அடிப்படையில் சாலையைச் சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram