கிடாத்திருக்கையில் சேதமடைந்த அரசுப்பள்ளி கட்டிடம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
5 Dec 2025, 4:21 pm
<p><strong>கிடாத்திருக்கையில் சேதமடைந்த அரசுப்பள்ளி கட்டிடம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை</strong></p>
<p>இராமநாதபுரம், டிச.5- இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கை என்ற கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது . இந்த பள்ளி வகுப்பறை கட்டிடம் கடந்த 2008 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இப்பள்ளியில் கொண்டுலாவி, கிடாத்திருக்கை, ஏனாதி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவ,மாணவியர்கள் படித்து வருகின்றனர் . இங்குள்ள 9 ஆம் மற்றும் 10 ஆம் வகுப்பு அறையில் மழை நீர் ஒழுகி வகுப்பறைகளில் நீர் தேங்குவதால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். சுவரில் கை வைத்தால் மின்சாரம் பாய்வதாக கூறப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகளின் நலன் கருதி சமுதாயக்கூடத்தில் வைத்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கணினிகள் அனைத்தும் நனைந்து சேதமடைந்துள்ளதால் தார்ப்பாய், பிளக்ஸ் பேனர்களைக் கொண்டு மூடி வைத்துள்ளனர். இந்த பள்ளியானது பத்தாம் வகுப்பு தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. எனவே பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
