தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

2026 ஒன்றிய பட்ஜெட்டில் தென் மாவட்டங்களுக்கு புதிய ரயில்கள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

7 Jan 2026, 4:05 pm
2026 ஒன்றிய பட்ஜெட்டில் தென் மாவட்டங்களுக்கு புதிய ரயில்கள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை
<p><strong>2026 ஒன்றிய பட்ஜெட்டில் தென் மாவட்டங்களுக்கு புதிய ரயில்கள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை</strong></p> <p>விருதுநகர், ஜன.7- 2026 ஆம் ஆண்டிற்கான ஒன்றிய பட் &nbsp;ஜெட்டில் தென் தமிழக மாவட்ட மக்கள் &nbsp;பயன்பெறும் வகையில் புதிய ரயில்கள் &nbsp;மற்றும் நீட்டிப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களி டையே எழுந்துள்ளது. மதுரை&ndash;நாகர்கோவில், நாகர்கோவில்&ndash;திருவனந்தபுரம் வரையிலான ரயில் பாதை கள் இரட்டை வழித்தடமாக மாற்றப்பட்டு, &nbsp;மின்மயமாக்கல் பணிகளும் நிறைவடைந் துள்ளன. இருப்பினும், இந்த வழித்தடங்க ளில் போதிய அளவில் ரயில்கள் இயக்கப்பட வில்லை என பொதுமக்கள் தொடர்ந்து குற் &nbsp;றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், வரும் பிப்ரவரி மாதம் &nbsp;வெளியிடப்படவுள்ள 2026 மத்திய பட்ஜெட் &nbsp;டில் புதிய ரயில்கள் மற்றும் நீட்டிப்பு ரயில்கள் &nbsp;தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளி யாக வேண்டும் என ரயில் பயணிகள் எதிர் &nbsp;பார்ப்பில் உள்ளனர். கூடல்நகரில் மெமு பணிமனை மதுரை ரயில்வே கோட்டத்தில் மெமு ரயில் சேவைகளை தொடங்குவதுடன், அதற் &nbsp;கான பராமரிப்பு பணிமனையை கூடல்நகரில் &nbsp;அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் பயணிகள் வருகை அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலை யங்களில் மேம்பாட்டு பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் &nbsp;முதல் தளம் முடிந்து திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. இதன் காரணமாக, மதுரை மற்றும் அத னைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு கோவில் &nbsp;வழிபாடு, மருத்துவம், கல்வி, வேலை வாய்ப்பு, வியாபாரம் உள்ளிட்ட காரணங்க ளுக்காக கேரளா மற்றும் வட மாநிலங்களில் &nbsp;இருந்து பெருமளவு மக்கள் வந்து செல்லும் &nbsp;சூழல் உருவாகியுள்ளது. துறைமுக நகர மான தூத்துக்குடிக்கும் தொழில் நிமித்த மாக வடமாநிலங்களில் இருந்து ஏராளமா னோர் வருகை தருகின்றனர். புதிய மெமு மற்றும் &nbsp;பயணிகள் ரயில்கள் எனவே, மதுரை&ndash;திருநெல்வேலி, மதுரை &ndash;தூத்துக்குடி, மதுரை&ndash;செங்கோட்டை, &nbsp;மதுரை&ndash;திருச்சி, மதுரை&ndash;போடி நாயக்கனூர், மதுரை&ndash;இராமேஸ்வரம், மதுரை&ndash;காரைக்குடி மற்றும் கொல்லம்&ndash; செங்கோட்டை&ndash;தென்காசி&ndash;இராஜ பாளையம்&ndash;விருதுநகர்&ndash;அருப்புக்கோட்டை வழியாக இராமேஸ்வரம் வரை தினசரி பயணி கள் மற்றும் மெமு ரயில்கள் இயக்கப்பட &nbsp;வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. ரயில் நீட்டிப்பு கோரிக்கைகள் தூத்துக்குடி&ndash;போடிநாயக்கனூர் வரை ரயில் சேவை நீட்டிப்பு, திருச்செந்தூர்&ndash;திருநெல்வேலி பயணிகள் ரயிலை மதுரை &nbsp;வரை நீட்டிப்பு, திருச்செந்தூர்&ndash;வாஞ்சி மணி யாச்சி (எண்: 56732) ரயிலை மானாமதுரை வரை நீட்டிப்பு, சென்னை எழும்பூர்&ndash;செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை &nbsp;தினசரி இயக்கம் வந்தே பாரத் ரயில் கோரிக்கை சென்னை&ndash;நாகர்கோவில் வந்தே பாரத் &nbsp;ரயில் விருதுநகர் சந்திப்பு நிலையத்தில் நின்று &nbsp;செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என &nbsp;கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி&ndash;சென்னை, திரு வனந்தபுரம்&ndash;கொல்லம்&ndash;செங்கோட்டை&ndash;விருதுநகர்&ndash;சென்னை, திருநெல்வேலி&ndash;பெங்களூரு (பகல் நேரம்) வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலி ருந்து மதுரை, விருதுநகர், இராஜபாளையம் வழியாக செங்கோட்டைக்கு தினசரி ரயில்கள் இயக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய வழித்தடம் மற்றும் அறிவிக்கப்பட்ட ரயில் மதுரை&ndash;அருப்புக்கோட்டை&ndash;விளாத்தி குளம் வழியாக தூத்துக்குடி வரை அமைக் &nbsp;கப்பட்டு வரும் புதிய ரயில் வழித்தட பணி களை விரைந்து முடிக்க போதிய நிதி ஒதுக்க &nbsp;வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. மேலும், மத்திய அரசால் ஏற்கனவே அறி விக்கப்பட்ட கோட்டயம்-கொல்லம்-புனலூர்-செங்கோட்டை-இராஜபாளையம்-விருதுநகர்-மதுரை-திண்டுக்கல்-பழனி-ஈரோடு வழித்தட தினசரி ரயிலை காலதாம தமின்றி இயக்க வேண்டும் எனவும் பயணி கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.