கீரப்பாளையத்தில் பழுதடைந்த சமுதாயக் கூடம் புதுப்பிக்க பொதுமக்கள் கோரிக்கை
20 Dec 2025, 3:38 pm
<p>சிதம்பரம், டிச. 20- கீரப்பாளையத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். திருமண மண்டபம் (சமுதாய நலக்கூடம்) தற்போது முற்றிலும் பழுதடைந்து, சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளது. ஏழை எளிய மக்கள் குறைந்த வாடகையில் பயன்படுத்தி வந்த இந்த மண்டபம் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதால், இதனைப் போர்க்கால அடிப்படையில் புதுப்பித்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
