வேல்ஸ் சாலை சந்திப்பு நெரிசலுக்கு சிறிய மேம்பாலம் அமைக்கப் பொதுமக்கள் கோரிக்கை!
7 Jan 2026, 4:05 pm
<p><strong>வேல்ஸ் சாலை சந்திப்பு நெரிசலுக்கு சிறிய மேம்பாலம் அமைக்கப் பொதுமக்கள் கோரிக்கை!</strong></p>
<p>சென்னை, ஜன.7- பல்லாவரம்-துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலையில் உள்ள வேல்ஸ் கல்லூரி சந்திப்பில் நிலவும் கடும் போக்கு வரத்து நெரிசலைத் தவிர்க்க, அங்கு சிறிய மேம்பாலம் அமைக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். ஐடி பூங்காக்கள் மற்றும் கல்வி நிறு வனங்கள் நிறைந்த இப்பகுதியில், மடிப்பாக்கம் சந்திப்பைப் போன்ற மேம்பால வசதி தடையற்ற பயணத்திற்கு அவசியமாகிறது. மேலும், குண்டும்குழியு மான சாலைகளைச் சீரமைப்பதோடு, நிலுவையில் உள்ள சர்வீஸ் சாலைப் பணி களை விரைந்து முடித்து விபத்துகளைத் தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.</p>
