தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

3 Feb 2026, 4:00 pm
திருச்சி விரைவு செய்திகள்

காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

இராமநாதபுரம், பிப்.3- இராமநாதபுரம் அருகே உள்ள பேராவூர் வடக்கு குடி யிருப்பு பகுதியில் குடிநீர் வசதி வழங்கக்கோரி அப்பகுதி  மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட னர். குடிநீர் வசதி இல்லாததால் தள்ளுவண்டிகளில் பல  கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருவதாக வும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை கோரிக்கை அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவும், எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து  தர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இராஜபாளையத்தில்  தேர்தல் பணி ஏற்பாடு தீவிரம்

இராஜபாளையம், பிப்.3- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் வாக்குச் சாவடிகளை தயார்படுத்தும் நிலைக்கு தேர்தல் ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் என்.சுகபுத்திரா உத்தரவின் பேரில் இராஜபாளையம் வட்டாட்சி யர் ராஜீவ் காந்தி தலைமையில் வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வரு கிறது. இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் உள்ள  269 வாக்குச்சாவடிகளிலும் இந்த ஆய்வு பணி நடை பெற்று வருகிறது. முதற்கட்டமாக இராஜபாளையம் நக ராட்சி பகுதியில் உள்ள 120 வாக்குச்சாவடிகளில் இராஜ பாளையம் வட்டாட்சியர் ராஜீவ் காந்தி, வருவாய் ஆய்வா ளர் மாரி வாசுகி, கிராம நிர்வாக அலுவலர் விஷ்ணு வர்தன், நகராட்சி தேர்தல் அலுவலர் முத்துக்குமார் ஆகி யோர் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்ட வாலிபர் கைது

இராஜபாளையம், பிப்.3- இராஜபாளையம் துரைசாமியாபுரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் அழகு ராஜ்(35). இவர் மீது  ஏற்கனவே தெற்கு காவல்நிலையத்தில் கொலை மற்றும்  அடிதடி, வழிப்பறி என்று பல வழக்குகளில் தொடர்புடை யவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த இவர், சிவகாமிபுரம் பகுதியில் உள்ள கடைக்கு சென்று அதன்  உரிமையாளர் கோவிந்தராஜ்(62) என்பவரை கத்தியை காட்டி மது குடிக்க பணம் வேண்டும் என்று மிரட்டி யுள்ளார். பணம் இல்லை என்று கூறியதும் கடையின் கல்லாப்  பெட்டியில் உள்ள பணத்தை எடுக்க முயற்சி செய்த போது அங்கிருந்தவர்கள் தடுத்ததால் கொலை மிரட்டல்  விடுத்ததாக கோவிந்தராஜ் தெற்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் செல்வம் வழக்குப் பதிவு செய்து அழகுராஜை கைது செய்தனர்.

ஒருவர் தற்கொலை

இராஜபாளையம், பிப்.3- இராஜபாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் வேல்முருகன் (55). கொத்தனார் வேலை செய்  யும் இவருக்கு சாந்தி என்ற மனைவியும், வனஜோதி, வினிதா என்ற 2 மகள்களும், மணிகண்டன் என்ற மகனும்  உள்ளனர். மகள்கள் இருவரும் திருமணமாகி தனியே வசித்து  வரும் நிலையில், மகன் கோவையில் தனியார் கம்பெனி யில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வேல்முரு கன் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து சுற்றி  திரிவதை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த வேல்முரு கன், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தெற்கு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து சார்பு ஆய்வாளர் செல்வம் விசாரணை செய்து வருகிறார்.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தந்தை கைது

விருதுநகர், பிப்.3- விருதுநகர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 8ம் வகுப்பு படிக்கும் 12வயது சிறுமி. இவர் கடந்த  ஜன.30 இல் இரவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தா ராம்.  அப்போது வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்த  தந்தை, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு  தந்துள்ளார். இத னால் அதிர்ச்சியடைந்த அச்சிறுமி, தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் விருது நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தந்தையை கைது செய்த னர்.

நெஞ்சுவலி: வாலிபர் பலி

இராஜபாளையம், பிப்.3- இராஜபாளையத்தை அடுத்த வடக்கு தேவதானம் பகுதியில் வசிப்பவர் வனராஜ் மகன் கருப்பசாமி(30). இவ ருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது என்று கூறி வனராஜ்  108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றார். ஆனால்  செல்லும் வழியிலேயே கருப்பசாமி பரிதாப மாக உயிரிழந்தார். இதுகுறித்து சேத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்ற னர்.

கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

இராஜபாளையம், பிப்.3- இராஜபாளையம் அம்பலபுளி பஜார் தெருவைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ் (35). இவரது மனைவி வேலு நாச்சியார். இந்நிலையில், சூரிய பிரகாஷ் தனது உறவினர் சத்தீஸ்வரனுடன், புளியங்குளம் கண்மாய் அருகே உள்ள ஒரு விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, நீச்சல் சரியாக தெரியாத காரணத்தால், சூரிய  பிரகாஷ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள், கிணற்றில் மூழ்கியிருந்த சூரிய பிரகாஷின் சடலத்தை மீட்டனர்.

இந்திய கடலோர காவல் படை பயிற்சிக்கு மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

இராமநாதபுரம், பிப்.3- இராமநாதபுரத்தில் மீனவர்களின் வாரிசுகள் இந்திய கப்பற்படை, இந்திய கட லோர காவல் படை ஆகியவற்றில் சேருவ தற்காக தகுதி அடிப்படையில் மீனவ வாரிசு  இளைஞர்களை தேர்வு செய்து அவர் களுக்கு மூன்று மாதகால இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் கடலோர பாதுகாப்பு குழுமம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு கட லோர பகுதி மீனவர்களின் வாரிசுகள் தலா  40 பேர் தேர்வு செய்யப்பட்டு 4 முறை மூன்று  மாத கால இலவச பயிற்சி நிறைவு செய்  துள்ள நிலையில் தற்போது ஐந்தாவது முறையாக 40 பேர் தேர்வு செய்யப்பட்டு விரைவில் மூன்று மாத காலத்திற்கு இராம நாதபுரம் மாவட்டம், கமுதி தனி ஆயு தப்படையில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள  விருப்பமுள்ள மீனவர்களின் வாரிசுகள் வரு கின்ற 16.2.2026-ம் தேதிக்குள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அருகிலுள்ள கடற்கரை காவல் நிலையங்கள் மற்றும் மீன்வளத்துறை அலுவலகங்களை தொட ர்பு கொண்டு அளிக்கலாம் என கேட்டுக்  கொள்ளப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தாட்கோ சிறப்பு திட்டத்தின் கீழ் பரிந்துரைத்தும் ஆழ்துளை கிணறு அமைக்கப்படவில்லை 124 ஆதிதிராவிட விவசாயிகள் காத்திருக்கும் அவலம்

இராமநாதபுரம், பிப்.3- தாட்கோ சிறப்பு திட்டத்தின் கீழ் இராம நாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி, முது குளத்தூர், பரமக்குடி, கடலாடி மற்றும் கீழக்கரை தாலுகாக்களைச் சேர்ந்த ஆதி திராவிடர் விவசாய குடிமக்களுக்கு ஆழ்  துளை கிணறுகள் அமைத்துத் தர வேண்டும்  என்ற கோரிக்கையை வலியுறுத்தியதன் விளைவாக, 2009ஆம் ஆண்டு 43 ஆதி திராவிடர் விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறுகள் வழங்கப்பட்டது. அதேபோன்று தற்போதைய கோரிக்  கையின் அடிப்படையில், அரசு செயலா ளர் தாட்கோ மேலாண்மை இயக்குநருக்கு பரிந்துரை செய்து, அதன் தொடர்ச்சியாக மாவட்ட தாட்கோ மேலாளர் மூலம் கள ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.  அதன்படி 124 ஆதிதிராவிடர் விவசாயி கள் பரிந்துரைக்கப்பட்டு, ஆய்வு அறிக்கை யும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், ஆய்வு  அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நீண்ட காலம்  கடந்தும் இதுவரை எந்தவிதமான திட்ட அம லாக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை. இதனால், மழை சார்ந்த விவ சாயத்தை மட்டுமே நம்பியுள்ள ஆதிதிரா விடர் விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தெரி வித்துள்ளது. எனவே, ஆய்வு முடிக்கப்பட்ட 124 பய னாளிகளுக்கு தாட்கோ சிறப்பு திட்டத்தின் கீழ் உடனடியாக ஆழ்துளை கிணறுகள் அமைத்துத் தர வேண்டும் என்றும், விவ சாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ஆதிதிராவிடர் ஆழ்  துளை கிணறுகள் விவசாயிகள் நலச்சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.

வேட்புமனுத் தாக்கல் செய்யும் 10 நாட்களுக்கு முன்பு வரை வாக்காளர்களை சேர்க்கலாம்

மாவட்ட ஆட்சியர் தகவல் சிவகங்கை, பிப்.3- இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழி காட்டுதலின்படி, சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டு, கடந்த  19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டிய லின்படி, மாவட்டத்தில் 10,79,105 வாக்கா ளர்கள் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யீட்டுக்குப் பின்னர், 19.12.2025 முதல் 30.1. 2026 வரை புதிய வாக்காளர்களைச் சேர்க்க,  தகுதியற்ற வாக்காளர்களை நீக்க, வாக்கா ளர் விபரங்களில் திருத்தம் மேற்கொள்ள பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி, 30.1.2026 வரை புதிய  வாக்காளர்களாக சேர 28,007 மனுக்கள்,   பெயர் நீக்கம் செய்ய 2,221 மனுக்கள்,  வாக்காளர் விபர திருத்தத்திற்கு 24,346  மனுக்கள், வெளிநாடு வாழ் வாக்கா ளர்களை சேர்க்க 17 விண்ணப்பங்கள் என  மொத்தம் 54,591 விண்ணப்பங்கள் நேரடி யாகவும், இணையதளம் மூலமாகவும் பெறப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலு வலர்களால் பரிசீலனை செய்யப்பட்டு வரு கின்றன. விண்ணப்பங்களின் பரிசீலனைக்குப் பின்னர், 17.2.2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளி யீட்டுக்குப் பின்னரும், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்படும் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் 10 நாட்களுக்கு முன்னர் வரை, பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய மற்றும் விபர திருத்தம் செய்ய தொடர்ச்சியாக விண்ணப்பங்களை அளிக்கலாம். மேலும், தேர்தல் நடைமுறைகளுக்குப் பின்னரும் பொதுமக்கள் தொடர்ந்து விண்ணப்பங்களை அளிக்கலாம். இவ்வாறு பெறப்படும் தகுதியான அனைத்து விண்ணப்பங்களும் பரி சீலனை செய்யப்பட்டு, ஒவ்வொரு காலாண்  டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட  தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான கா.பொற்கொடி தெரி வித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.