தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தகோரி பொதுமக்கள் சாலை மறியல்

11 Dec 2025, 5:47 pm
டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தகோரி பொதுமக்கள் சாலை மறியல்
<p><strong>டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தகோரி பொதுமக்கள் சாலை மறியல்</strong></p> <p>திருப்பத்தூர், டிச. 11 ஆம்பூரில், டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, பாதையை மறித்து &nbsp;பொது மக்கள் போராட்டம் நடத்தினர். &nbsp;ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட புது கோவிந்தாபுரம் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், இப்பகுதியில் உள்ள &nbsp;மதுபான கடைக்கு வரும், மதுப்பிரியர்கள், ரகளை யில் ஈடுப்படுவதாகவும், இதனால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல், கடும் அவதிடையந்து வருவதாகவும், மேலும், இந்த மதுபானகடைக்கு, மது பானம் ஏற்றி வரும் வாகனங்களால், அப்பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம் சேதமடைவதாக கூறி, ரயில்வே நிர்வாகத்தினர் அவ்வழியாக செல்லும், பாதையை அடைப்பதாக கூறுவதாகவும், இதனால் தங்கள் பகுதிக்கு செல்ல பாதை இல்லையெனவும், உடனடியாக இப்பகுதியில் உள்ள அரசுமதுபான கடையை அகற்றக்கோரி, அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்ட நிலையில், டிசம்பர் 10 க்கு பிறகு மதுபானகடை அகற்றப்படும் என தெரிவித்திருந்த நிலையில், வியாழனன்று (டிச.11) மீண்டும் மதுபானகடை திறக்கப்பட்டதால், &nbsp;மதுபான கடைக்கு செல்லும் பாதையை மறித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர், அதனை தொடர்ந்து இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் நகர காவல்துறை யினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை யில் ஈடுப்பட்டு, ஒருமாத காலத்திற்குள் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தின் பேரில், பொதுமக்கள், டாஸ்மாக் ஊழி யர்களிடம் எழுதிவாங்கிக்கொண்டு &nbsp;போரா ட்டத்தை, கைவிட்டு கலைந்துச்சென்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.