குடியிருப்புப் பகுதியில் தேங்கிய தண்ணீரை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
5 Dec 2025, 4:21 pm
<p><strong>குடியிருப்புப் பகுதியில் தேங்கிய தண்ணீரை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்</strong></p>
<p>திருவண்ணாமலை, டிச. 5- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பிருதூர் கிராமத்தில் உள்ள இஸ்லாமியர்கள் வசிக்கும் குடி யிருப்புப் பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்தக் குடியிருப்பையொட்டி உள்ள கன்னியாகுமரி வழித்தட சாலை புதிதாக உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் குடியிருப்புப் பகுதி சாலை மட்டத்தை விடத் தாழ்வாக உள்ளது. இதன் விளைவாக, மழை பெய்யும் நேரத்தில் குடியிருப்புப் பகுதியை நீர் சூழ்ந்து, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுகாதார சீர்கேடும், கட்டிடங்களுக்குப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் எனச் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள், மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தித் தரக் கோரி, வந்தவாசி - மேல்மருவத்தூர் சாலை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, கோரிக்கைகள் உடனடி யாக நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.</p>
