தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அன்னதானம் வழங்க தகர செட் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் பொதுமக்கள் சாலை மறியல்

29 Mar 2026, 3:34 pm
அன்னதானம் வழங்க தகர செட் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் பொதுமக்கள் சாலை மறியல்
<p><strong>அன்னதானம் வழங்க தகர செட் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் பொதுமக்கள் சாலை மறியல்</strong></p> <p>கடமலைக்குண்டு, &nbsp;மார்ச் 29- தேனி மாவட்டம் ஆண் டிப்பட்டி தொகுதிக்கு உட் &nbsp;பட்ட கடமலை - மயிலை &nbsp;ஒன்றியம் தேவராஜ்நகர் கிரா மத்தில் சீதாளகாளியம்மன் மற்றும் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. கடந்த 41 ஆண்டுகளாக இந்த கிராம &nbsp;மக்கள் இந்த கோயிலில் வழி பட்டு வருகின்றனர். இந் நிலையில் கோவிலில் பக்தர் களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக தகர செட் &nbsp;அமைக்கும் பணியை ஊர் &nbsp;பொதுமக்கள் மேற்கொண்ட னர். இதற்கு கண்டமனூர் வனத்துறையினர் தடை விதித்தனர். பொதுமக்கள், பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் வனத்துறையினர் அனுமதி &nbsp;வழங்க முன்வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், கோவில் பரா மரிப்பு பணிகளுக்கு முட்டுக் &nbsp;கட்டை போடும் வனத்துறை யைக் கண்டித்தும், அரசு நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி யும் சாலை மறியல் போராட் &nbsp;டம் நடத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆண்டிப்பட்டி டி.எஸ்.பி சிவசுப்பு மற்றும் &nbsp;கடமலைக்குண்டு போலீ சார் மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோவிலில் அன்னதான செட் அமைக்க அனுமதி வழங்கினால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என பொது மக்கள் போலீசாரிடம் திட்ட வட்டமாகத் தெரிவித்தனர். சுமார் ஒரு மணி நேர மறிய லால் அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமை யாகப் பாதிக்கப்பட்டது. இத னைத் தொடர்ந்து வாகனங் கள் மேலப்பட்டி வழியாக மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இறுதியில், சம்பந்தப்பட்ட வனத்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய அனுமதி பெற்றுத் தருவதாக போலீசார் உறுதி யளித்ததை அடுத்து, பொது மக்கள் போராட்டத்தைக் கை விட்டனர். மீண்டும் கோவில் பணிகளில் இடையூறு ஏற் &nbsp;பட்டால் மிகப்பெரிய அள வில் போராட்டம் நடத்த உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.