குடிநீர், பேருந்து வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
28 Feb 2026, 2:29 pm
<p><strong>குடிநீர், பேருந்து வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்</strong></p>
<p>ஈரோடு, பிப்.28- தாளவாடி அருகே குடிநீர் மற்றும் பேருந்து வசதி ஏற் படுத்தித்தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொது மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், தாளவாடி ஒன்றியம், திங்களூர் ஊராட்சிக்குட்பட்ட சிக்கநந்தி, டி. பி. தொட்டி, என்.எஸ்.புரம் கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக சீரான குடிநீர் வழங்கவில்லை எனக்கூறி, அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரி களை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். அதேபோல், இப்பகு திக்கு முறையான பேருந்து வசதியும் இல்லாததால், மாண வர்கள் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு நடந்து சென்று, அங்கி ருந்து பேருந்தில் ஏறி சென்று வருகின்றனர். முறையான பேருந்து வசதி வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக்கள் வெள்ளியன்று காலிக்குடங்களுடன் பாச குட்டை என்ற பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த கடம்பூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இச்சம்பவத் தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p>
