தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மஞ்சலகிரி சாலை சந்திப்பில் விபத்து ஒருவர் உயிரிழந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்

6 Mar 2026, 3:17 pm
மஞ்சலகிரி சாலை சந்திப்பில் விபத்து  ஒருவர் உயிரிழந்ததால்  பொதுமக்கள் சாலை மறியல்
<p><strong>மஞ்சலகிரி சாலை சந்திப்பில் விபத்து &nbsp;ஒருவர் உயிரிழந்ததால் &nbsp;பொதுமக்கள் சாலை மறியல்</strong></p> <p>கிருஷ்ணகிரி, மார்ச் 6- தேசிய நெடுஞ்சாலை மஞ்சலகிரி சாலை சந்திப்பில் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அப்பகுதியில் வேகத்தடை அமைக்கக் கோரி பொது மக்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர். ஓசூர் - ராயக் கோட்டை மாநில நெடுஞ் &nbsp; சாலை எண் 85 விரி வாக்கப் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வரு கிறது. இந்தச் சாலையில் ராயக்கோட்டை அருகில் உள்ள டாடா எலக்ட்ரா னிக்ஸ் தொழிற்சாலைக்குச் சில கிலோமீட்டருக்கு முன்பு மஞ்சலகிரி கிராம சாலை மாநில நெடுஞ்சாலையில் சந்திக்கிறது. வெள்ளிக்கிழமை காலை நெடுஞ்சாலையில் வந்த தனியார் பள்ளிப் பேருந்து மோதியதில் மஞ்சலகிரியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இதை அறிந்த கிராம மக்கள் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அங்கு வந்த தேன்கனிக் கோட்டை மற்றும் ராயக் &nbsp;கோட்டை காவல் துறை யினர் மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த இடத்தில் வேகத்தடை அமைக்கப்படாததால் ஒரு மாதத்திற்குள் இதுவரை 4 விபத்துகளும், வெள்ளிக் &nbsp;கிழமை (மார்ச் 6) காலை விபத்தில் முதல் உயிர் பலி யும் நடந்துள்ளது. எனவே, மாநில நெடுஞ்சாலையில் மஞ்சலகிரி சாலை சந்திப்பு அருகில் உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும்என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். வேகத்தடை அமைக்கப்ப டும் என்ற சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.