அரசு பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்; பரபரப்பு
1 Nov 2026, 1:24 am

அரசு பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்; பரபரப்பு

நாமக்கல், அக்.31-ஐந்துபனை பேருந்து நிறுத்தத்தில் தமிழக அரசின் வெற்றிப் பயணபேருந்து நிற்காது என்று நடத்துநர்பெண்களிடம் கூறியதால்பேருந்தைசிறைபிடித்த பொதுமக்கள், ஓட்டுநர் மற்றும் நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வழியாக ஈரோடு செல்லும் தமிழகஅரசு பேருந்து வெள்ளியன்று இரவு வந்தது. இந்த பேருந்து திருச்செங்கோடு பேருந்து நிலையத்திற்கு வந்தபோது, பள்ளிபாளையம் அருகேஉள்ள ஐந்துபனை பகுதிக்கு செல்வதற்காக இரண்டு பெண்கள் பேருந்தில் ஏறியுள்ளனர். பேருந்துசிறிது தூரம் சென்றபிறகு, ஐந்துபனை பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்த முடியாது எனநடத்துநர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பெண்களில் ஒருவரான செல்வி தனது உறவினருக்குதொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஐந்தபனை பேருந்து நிறுத்தத்தில் செல்வியின் உறவினர்கள் அரசு பேருந்தை வழிமறித்து நிறுத்தினர்.

அந்த பேருந்து ஏன் அங்கு நிற்காதுஎன கேள்வி எழுப்பியபடி, பேருந்தின் முன்பாக நின்று சிறைபிடித்தனர். மேலும், ஓட்டுநர் மற்றும் நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக பேருந்தை அங்கிருந்து செல்லவிடாமல் பொதுமக்கள் வாக்குவாதத்தில்ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, பேருந்தை சிறைபிடித்த பொதுமக்களிடம் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள்செல்போன் மூலம் விவரங்களைக் கேட்டறிந்தனர். இதுகுறித்து உரியநடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, பொதுமக்கள் பேருந்தை விடுவித்தனர். பின்னர் பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது.