தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நிர்வாகத் தோல்வியை மறைக்க மக்கள் மீது சுமையா? பிரதமரின் உபதேசங்களுக்கு பொதுமக்கள் கண்டனம்!

17 May 2026, 12:49 am
நிர்வாகத் தோல்வியை மறைக்க மக்கள் மீது சுமையா? பிரதமரின் உபதேசங்களுக்கு பொதுமக்கள் கண்டனம்!

நிர்வாகத் தோல்வியை மறைக்க மக்கள் மீது சுமையா? பிரதமரின் உபதேசங்களுக்கு பொதுமக்கள் கண்டனம்!

உலக நாடுகளில் ஏற்படும் போர்ச் சூழல், பொருளாதாரத் தடைகள் மற்றும் நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடியைக் கார ணம் காட்டி, எரிபொருள் சிக்கனம், தங்கம் வாங்குவதை தவிர்த்தல், வீட்டிலிருந்தபடியே வேலை செய்தல் உள்ளிட்ட பல்வேறு அறிவுரை களையும் கட்டுப்பாடுகளையும் பிரதமர் நரேந் திர மோடி அண்மையில் வழங்கியுள்ளார். கொரோனா பெருந்தொற்று காலத்தில், அறி வியல் பூர்வமாக யோசிக்காமல் ’விளக்கு ஏற்றுங் கள், கை தட்டுங்கள்’ என்று கூறிவிட்டு, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கும் அதே பாணியில் வீட்டிலேயே இருங்கள் உபதேசங்கள் வழங்கு வது ஒன்றிய அரசின் நிர்வாகத் தோல்வியை யும், பொறுப்பற்ற தன்மையையும் காட்டு வதாக பொதுமக்கள் கொந்தளிக்கின்றனர். இதுகுறித்து நமது செய்தியாளர்கள் திரட்டிய மக்களின் நேரடி மற்றும் விரிவான கருத்துகள் இதோ: ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் என்ன? - கணேஷ் & மணிவண்ணன் பிரதமரின் உரையில் பெட்ரோல், டீசல் குறை வாக செலவு செய்வது மற்றும் தற்போதைய விலைவாசிக்கு தங்கம் வாங்காமல் இருப்பது நல்ல யோசனைதான் என்று ஆட்டோ ஓட்டுநர் மணிவண்ணன் தெரிவித்தாலும், இதனை முற் றிலும் மறுக்கிறார் கணேஷ். அரசாங்கம் தன் கையாலாகாத்தனத்தை மறைக்க மக்கள் மீது கோரிக்கைகளை வைக்கிறது. பிரதமர் மட்டும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணங்களை மேற் கொள்கிறார், அதை எந்தச் செலவில் சேர்ப்பார்? எல்லாரும் கணினி முன்னாடி உட்கார்ந்து வேலை செய்ய முடியாது. இங்கு தினக்கூலிகள் தான் அதிகம். பொதுப் போக்குவரத்தையும் பயன் படுத்த சொன்னால், ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் என்னாவது? என்று கேள்வி எழுப்புகிறார். பொருளாதாரத் தாக்கமும் பற்றாக்குறையும் - சுரேஷ் கிராமப்புறங்களில் கூட எரிபொருள் பற்றாக் குறை மற்றும் பெட்ரோல் கிடைக்காத நிலை ஏற்பட்டால் மக்கள் என்ன செய்வார்கள்? சிஎன்ஜி (CNG) எரிவாயுவும் எளிதில் கிடைப்ப தில்லை. கடந்த பத்து ஆண்டுகால பொருளாதார நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால் நடுத்தர மக்க ளுக்கு பெரிய மாற்றம் எதுவும் தெரியவில்லை. கேஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் எரி பொருள் பற்றாக்குறை சாமானிய மக்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் மாணவர்களை நேரடியாகப் பாதித்து வருகிறது. நடைமுறைக்கு சாத்தியமற்ற ’வொர்க் ஃப்ரம் ஹோம்’ - நவீன்குமார், கோபால் கல்யாணத்திற்கு நகை வாங்குபவர்கள், பிரதமர் சொன்னார் என்பதற்காக வாங்காமல் இருக்க மாட்டார்கள்” என்கிறார் நவீன்குமார். மேலும், வீட்டிலிருந்தே வேலை (Work from Home) என்பது ஐடி நிறுவனங்களுக்கு மட் டுமே செட் ஆகும், மற்ற உழைக்கும் வர்க்கத் திற்கு சாத்தியமில்லை என்பதை கோபாலும் ஆமோதிக்கிறார். கூலி வேலை செய்பவர்கள் எப்படி வீட்டிலிருந்து வேலை செய்ய முடியும்? அதுபோல, இயற்கை விவசாயம் நல்லது என்றா லும், திடீரென ரசாயன உரங்களை நிறுத்த சொன்னால் விளைச்சல் குறைந்துவிடும் என்ற பயம் விவசாயிகளிடம் உள்ளது” என்கிறார் கோபால். மாற்று வழிகளை யோசிக்க வேண்டும் - ஜமுகா ராஜா முன்பெல்லாம் பெட்ரோல் மற்றும் தங்கத் தின் விலை சாமானியர்களுக்கு எட்டும் தூரத்தில் இருந்தது. இன்று நாட்டின் பொருளாதாரம் வெளி நாட்டு முதலீடுகளையும் கடன்களையும் சார்ந்து நிற்கிறது. மக்களின் அத்தியாவசியத் தேவை கள், பயணம் மற்றும் வாழ்க்கை முறைகளில் கட்டுப்பாடுகளை விதிப்பது சரியான அணுகு முறை அல்ல. தினக்கூலித் தொழிலாளர்கள், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்குச் செல்ல பெட்ரோலை நம்பியிருக்கிறார்கள். அவர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யச் சொல்வது நடைமுறைக்கு ஏற்காது. இதற்குத் தீர்வாக, ஒன்றிய அரசு இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளை சரியான முறையில் ஈர்த்து, வேலை வாய்ப்புகளை உருவாக்கிப் பொருளா தாரத்தை வலுப்படுத்த வேண்டும். அப்போது தான் மக்களின் வாழ்க்கை தரம் உயரும். அரசின் அலட்சியம் - பல்லவன் & கனகராஜ் எங்கள் வீட்டில் இப்போது ஒரு கல்யாணம் நடக்கிறது, பிரதமர் சொன்னார் என்பதற்காக தங்கம் வாங்காமல் இருக்க முடியுமா?” என்று கேட்கிறார் பல்லவன். ”வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்று சொல்வது அங்கு வேலை செய்யும் இந்தியர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். மெட்ரோ ரயில்கள் அனைத்து நக ரங்களிலும் இல்லை. மாணவர்களை ஆன்லை னில் படிக்கச் சொன்னால், அரசுப் பள்ளி மாண வர்களின் நிலை என்னவாகும்? வசதி படைத்த வர்களுக்கான திட்டங்களைச் சாமானியர்கள் மீது திணிப்பது அரசின் அலட்சியத்தையே காட்டு கிறது.” இதனை வழிமொழியும் கனகராஜ், ”தன் னுடைய நிர்வாகத் தோல்வியை மறைக்க, மக் கள் மீது சுமையை ஏற்றுவதே ஒன்றிய மோடி அரசிற்கு வாடிக்கையாகி விட்டது. மக்களின் அத்தியாவசியத் தேவைகளான எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் வாழ்வா தார உரிமைகளில் கட்டுப்பாடுகளை விதிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே ஒட்டுமொத்த பொதுமக்களின் கருத்தாக உள் ளது. போரை காரணம் காட்டி உபதேசங்கள் வழங்குவதை விடுத்து, நாட்டின் வளங்களைப் பாதுகாத்து, வேலைவாய்ப்புகளை பெருக்கி பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் உருப்படி யான வேலைகளில் ஒன்றிய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

நாளை தொழிற்சங்கங்கள் போராட்டம்

அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம் திருப்பூர் மாவட்டம், அவிநாசி சாலையி லுள்ள சிஐடியு அலுவலகத்தில் சனியன்று நடைபெற்றது. இதில், ஒன்றிய பாஜக அர சின் அமெரிக்க இஸ்ரேல் ஆதரவு தவறான வெளியுறவு கொள்கையின் காரணமாகவும், கார்ப்பரேட் கம்பெனிகளை மட்டுமே வாழ வைக்கும் நடவடிக்கை காரணமாகவும், மக் கள் அன்றாடும் வாங்கி பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அத்தி யாவசிய பொருட்களின் விலைகள் பல மடங்கு உயரும் அபாயம் உள்ளது. இவற்றை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டுமென வலியுறுத்தியும், வெளியுறவு கொள்கையில் சரியான நிலைபாட்டினை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் திங்களன்று (நாளை) மாலை 5 மணிக்கு திருப்பூர் மாநக ராட்சி அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.

தொகுப்பு: நந்தினி, கதிரவன், நவீன், அஜித்குமார், மாணிக்கவாசன், திவ்யா.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.