தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

செம்மொழிப் பூங்காவை பார்வையிட இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி

10 Dec 2025, 4:08 pm
செம்மொழிப் பூங்காவை பார்வையிட இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி
<p><strong>செம்மொழிப் பூங்காவை பார்வையிட இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி</strong></p> <p>கோவை, டிச.10 - கோவை காந்திபுரம் பகுதியில் ரூ.208 கோடி செலவில் 45 ஏக்கர் &nbsp;பரப்பளவில் உலகத் தரத்தில் அமைக் கப்பட்ட செம்மொழிப் பூங்கா இன்று பொதுமக்களுக்கு முழுமையாகத் திறந்துவிடப்படுகிறது என மாநக ராட்சி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் ரூ.208 கோடி செலவில் 45 ஏக்கர் பரப்பளவில் உலகத் தரத்தில் அமைக்கப்பட்ட செம்மொழிப் பூங் காவை, கடந்த நவம்பர் 25 ஆம் தேதி யன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் திறந்து வைத்தார். அதன் பிறகு சில நிறைவுப் பணிகள் மீத மிருந்ததால் பொதுமக்களுக்கு அனு மதி தாமதமானது. தற்போது அனைத் துப் பணிகளும் முழுமையடைந்து விட்ட நிலையில், இன்று (வியாழக் கிழமை) காலை 6 மணி முதல் பூங்கா &nbsp;பயன்பாட்டுக்கு வந்துவிடும் என மாந கராட்சி ஆணையர் மா. சிவகுரு பிர பாகரன் தெரிவித்தார். தமிழ் மொழியின் செம்மையை யும் இலக்கிய, பண்பாட்டுப் பெரு மையையும் உலகறியச் செய்யும் வகையில் 23 பிரிவுகளாக வடிவ மைக்கப்பட்டுள்ள இப்பூங்காவில், ஆயிரம் வகை ரோஜாக்கள் கொண்ட &nbsp;மலர்த்தோட்டம், தமிழ் இலக்கிய, பண்பாட்டுச் சிற்பங்கள், பொட்டா னிக்கல் தோட்டம், தமிழ் வரலாற் றைச் சித்தரிக்கும் அனுபவ மையம், செயற்கை நீருற்று, திறந்தவெளி அரங்கு, கன்வென்ஷன் சென்டர், ஜாக்கர்ஸ் டிராக், குழந்தைகள் விளையாட்டு மண்டலங்கள் உள் ளிட்ட ஏராளமான உலகத் தரம் &nbsp;வாய்ந்த வசதிகள் இடம்பெற்றுள் ளன. பூங்காவுக்கு நுழைவுக் கட்டண மாக பெரியவர்களுக்கு ரூ.15, பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.5 வசூலிக்கப்படுகிறது. நடை பயிற்சிக்காக மட்டும் பயன்படுத் துபவர்களுக்கு மாதாந்திர கட்டணம் &nbsp;ரூ.100, கேமரா ரூ.25, வீடியோ கேமரா &nbsp;ரூ.50, திரைப்பட ஒளிப்பதிவுக்கு ஒரு &nbsp;நாளைக்கு ரூ.25,000, குறும்படம் மற் றும் இதர ஒளிப்பதிவுக்கு ரூ.2,000 &nbsp;எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள் ளது. பூங்கா காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும். முதல்வர் திறந்து வைத்த பிறகு &nbsp;எப்போது உள்ளே செல்லலாம் என &nbsp;கோவை மக்கள் ஆவலுடன் காத்தி ருந்த நிலையில், இன்று (வியாழக் கிழமை) முதல் திறப்பு எனும் செய்தி &nbsp;நகரம் முழுவதும் பெரும் உற்சா கத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.