தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பி.டி.ஓ. தடை உத்தரவை மீறி செயல்பட்ட தார் தொழிற்சாலை முற்றுகை

14 Dec 2025, 3:45 pm
பி.டி.ஓ. தடை உத்தரவை மீறி செயல்பட்ட தார் தொழிற்சாலை முற்றுகை
<p><strong>பி.டி.ஓ. தடை உத்தரவை மீறி செயல்பட்ட தார் தொழிற்சாலை முற்றுகை</strong></p> <p>திருவள்ளூர், டிசம்பர் 14: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டியை அடுத்த இராமச்சந்திராபுரம் கிரா மத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் இனக் குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிக்கு அருகில், கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் திறக்கப்பட்ட தனியார் தார் தொழிற் சாலை சட்டவிரோதமாகச் செயல்படுவ தாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தார் எரிப்பதால் வரும் கரும்புகை மற்றும் எம்-சாண்ட் அரைப்பதால் வரும் தூசி ஆகி யவை காற்றில் கலந்து அப்பகுதி மக்களை, &nbsp;குறிப்பாகக் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியோரை மூச்சுத் திணற லால் பாதிக்கின்றன. மேலும், நிலத்தடி நீர் மாசுபட்டு நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைமையில் போராட்டம் நடத்திய தால், தொழிற்சாலை சிறிது காலம் மூடப் பட்டது. ஆனால், மீண்டும் இயங்கத் துவங்கியது. இதையடுத்து, நவம்பர் 11 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிக்கப்பட்ட நிலையில், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் ஆய்வு செய்து, தொழிற்சாலையை மூட எழுத்து பூர்வமாக உறுதியளித்தார். இந்த உத்தரவையும் மீறி, டிசம்பர் 13 &nbsp;அன்று தொழிற்சாலை மீண்டும் இயங்கிய தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் டி. கோபாலகிருஷ்ணன் தலைமையிலான அப்பகுதி மக்களும், கட்சி நிர்வாகிகளும் தொழிற்சாலையை முற்றுகை யிட்டனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், மக்களைப் பாது காக்கப் போராட்டக் குழு அமைத்துக் களம் காணுவோம் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.