முந்தய பக்கம்

பிஎஸ்எல்வி சி62 ராக்கெட்  ஜன.12-இல் விண்ணில் ஏவப்படுகிறது

8 Jan 2026, 2:44 pm
பிஎஸ்எல்வி சி62 ராக்கெட்  ஜன.12-இல் விண்ணில் ஏவப்படுகிறது
<p><strong>பிஎஸ்எல்வி சி62 ராக்கெட் &nbsp;ஜன.12-இல் விண்ணில் ஏவப்படுகிறது</strong></p> <p>சென்னை, ஜன. 8- இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ ஜனவரி 12 ஆம் &nbsp;தேதி பிஎஸ்எல்வி சி62 &nbsp;ராக்கெட்டை அன்றைய தினம் காலை 10.17 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள &nbsp;சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவு தளத்தில் இருந்து ஏவ திட்ட மிடப்பட்டுள்ளது என இஸ்ரோ தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த ஏவுதலை, ஏவுதல் காட்சிக் கூடத்தில் இருந்து பொதுமக்கள் பார்க்க ஆன்-லைனில் எல்விஜி டாட் ஷார் டாட் ஜிஓவி டாட் இன் என்ற இணையதளத்தில் பதிவு &nbsp;செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்எல்வி சி62 ராக்கெட் மூலம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் &nbsp;மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப்பட்ட மேம்பட்ட &nbsp;புவி கண்காணிப்பு ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் செயற்கைக் கோளான இஓஎஸ்-என்1 அன்வேஷா விண்ணில் ஏவப்படு கிறது. இது படமெடுக்கும் செயற்கைக்கோள் ஆகும். மேலும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கெஸ்ட்ரல் இனி ஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர் என்ற சிறிய செயற்கைக் கோள் மற்றும் இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் &nbsp;அமெரிக்கா முழுவதும் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவ னங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 துணை &nbsp;செயற்கைக்கோள்களும் இந்த ராக்கெட் மூலம் ஏவ திட்ட மிடப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram