முந்தய பக்கம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 330 எழுது மேசைகள் வழங்கல்

24 Mar 2026, 3:23 pm
அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 330 எழுது மேசைகள் வழங்கல்
<p><strong>அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 330 எழுது மேசைகள் வழங்கல்</strong></p> <p>சென்னை,மார்ச் 24- சென்னை, அண்ணா நகரில் உள்ள எஸ்பிஓஏ பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரி &nbsp;தங்களிடமிருந்த 330 இருக்கைகள் மற்றும் 330 எழுது மேசைகளை &lsquo;கற்றல் வசதியுடன் &nbsp;கல்வி&rsquo; திட்ட செயல்பாட்டிற்காக வழங்கி யுள்ளது. &nbsp;இவை அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் &nbsp;அச்சிறுப்பாக்கம் கல்வி வட்டாரத்தில் ஒரத்தி அருகிலுள்ள அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது என்று கற்றல் வசதியுடன் கல்வி&rsquo; திட்டத்தின் நிறுவன ரும், சிறுதாமூர் ஸ்ரீ ஸ்ரீனிவாசர் அறக்கட்ட ளையின் நிர்வாக இயக்குநருமான &nbsp;விஜய கிருஷ்ணன் தெரிவித்தார். &nbsp;இருக்கை மற்றும் எழுது மேசைகளை அச்சிறுபாக்கம் வட்டம் மதுராந்தகம் வட்டம் வேடந்தாங்கல் &nbsp;அருகிலுள்ள சித்திரகூடம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு வழங்கும் விழா &nbsp;செவ்வாயன்று (மார்ச்24) நடைபெற்றது. &nbsp;வட்டாரக் கல்வி அலுவலர் ஜி. மணி வண்ணன் முதன்மை விருந்தினராக இவ் விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக் கான &nbsp;இருக்கைகளை &lsquo;கற்றல் வசதியுடன் கல்வி&rsquo; திட்டத்தின் நிறுவுநரும், செயலாக்கு நருமான கவிஞர் &nbsp;விஜயகிருஷ்ணனி டமிருந்து பெற்றுக்கொண்டு பள்ளிக்கு வழங்கினார். &nbsp; சித்திரகூடம் &nbsp;பள்ளித் தலைமை ஆசிரியர் &nbsp;தி .இராசேந்திரன, சமூக ஆர்வலர் சுகுமார், ரங்கப்பன், திவ்யா, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் &nbsp;கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram