முந்தய பக்கம்

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கல்

11 Jan 2026, 2:59 pm
கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில்  மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கல்
<p><strong>கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் &nbsp;மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கல்</strong></p> <p>கும்பகோணம், ஜன.11- &nbsp;கும்பகோணம் அரசு(தன்னாட்சி) கலைக் கல்லூரியில் தமிழக முதல்வர் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் சார்பில் &ldquo;உலகம் உங்கள் கையில்&rsquo;&rsquo; என்னும் நோக்கத்துடன் 1,113 மாணவ-மாணவியருக்கு மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அ. குணசேகரன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மா. கோவிந்தராசு வரவேற்றுப் பேசினார். மாநிலங்களவை உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க. அன்பழகன், மாணவ-மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி சிறப்புரையாற்றினர். தஞ்சாவூர் மாவட்ட திட்ட இயக்குநர் மு. பாலகணேஷ், மாநகராட்சி மேயர் க. சரவணன், மாநகராட்சி துணை மேயர் சு.ப. தமிழழகன், கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் காந்திராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மடிக்கணினி வழங்குவதற்கு அமைக்கப்பட்ட சிறப்பு அலுவலர் இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் சௌ. அசோக்ராஜ், மாணவர்களை ஆற்றுப்படுத்தினார். &nbsp;கல்லூரித் தேர்வு நெறியாளர் வெ. பாஸ்கர், கல்லூரி மூத்த பேராசிரியர் சீ. தங்கராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வேதியியல் துறைத் தலைவர் மா. மீனாட்சி சுந்தரம் நன்றியுரை ஆற்றினார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram